மூளையை வளர்க்க சில டிப்சுகள்

நமது மூளையின் திறனில் சராசரி மனிதர்கள் 6-7 சதவீதம்தான் பயன்படுத்துகிறார்கள் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சராசரி இல் இயங்கும் நமது மூளையை அதன் திறனை சற்று கூட்ட சில வழிமுறைகள்...வாருங்கள் கொஞ்சம் முயற்சித்து பாப்போம் .

மூளையின் திறனை சின்ன சின்ன விஷயங்கள் கொண்டு மெருகேற்றலாம். அதில் பல ஸ்டாக் இருக்கு. அதில் சில .. இன்று... இங்கே.... இப்போ !

1- சார்ஜில் போட்ட ஸ்மார்ட் போனில் எவ்வளவு சார்ஜ் ஏறியிருக்கும்  என்று பார்க்கும்முன்
2- இப்ப நேரம் என்ன என்று பார்க்கும் முன்

இது போன்ற பல சிறிய சிறிய 'முன்'களுக்கு  முன்...பதில் என்ன என்று நீங்களே ஒரு முறை   கெஸ் பண்ணிட்டு அப்புறம் விடையை தேடுங்க ...ஒரு மாசத்தில் உங்கள் மூளை திறனில் வரும் வித்தியாசம் கவனியுங்க... 

எந்த வேலை செய்கிறோமோ அந்த வேலையை பற்றிய சிந்தனைகளை உங்கள் மூளையுடன் பேசி சரி பார்த்து பார்த்துகொள்ளுங்கள். புரியலையா...!? சிம்பிள்., ஒரு வேளையில் ஈடுபடும் போது உங்கள் எண்ணங்களான உங்கள் மனது / மூளை ஒன்றி செய்யும் வித்தையின் வடிவம் இது. இவ்வாறு செய்யும் போது அந்த நிகழ்வு அடுத்த முறை வரும்போது தானே மூளை அந்த வேலையை அனிச்சையாக செய்துவிடும். உங்கள் நண்பர்  வீட்டு வாசல் உயரம் குறைவு...நீங்கள் அதனை கவனித்து குனித்து சென்று விட்டீர்கள்...இன்னொரு நாள் கவனிக்கவில்லை என்றால் முட்டிகொள்வீர்கள் ...

ஆக முதன் முறை அங்கு வந்தபோது சற்று நிதானித்து உங்கள் மனதிடம்/மூளையிடம் இங்கு உயரம் குறைந்த வாசல் இருப்பதை உணர்த்திவிட்டீர்கள் என்றால் அடுத்த முறை அதுவே ஆபாய சங்கை ஒலிக்கும், இடிக்காமல் பாதுகாக்கும்.பல நாட்கள் அங்கு சென்று வந்தால் இதனை மூளையே புரிந்துகொண்டு  விடும்தான் , ஆனால் அதற்கு நாட்கள் பிடிக்கும், so ...இதன் பயன்பாடு வாசல் குனித்து செல்வதற்கு மட்டுமில்லை...என்பதை புரிந்து கொள்ள முயற்சித்து பாருங்கள்.

எந்த வேளையிலும் / வேலையிலும் மூளை அவ்வளவு சீக்கிரம் டயர்ட்  ஆகாது...வேறு வேறு வேலைகள் வரும்போது உங்கள் மூளையுடன் நீங்களே கொஞ்சம் பேசி பாருங்கள்...அதுதான் யோசனை செய்வது என்பார்களே...அது...அதன் திறனை அந்த குறிப்பிட்ட வேளையில் எப்படி போன முறை செய்தது...இந்த முறை எப்படி செய்கிறது என்று பாருங்கள்...இம்ப்ரூவ்மெண்ட் தெரிகிறதா என ஒப்பீட்டு பாருங்கள்.

இடது கை பழக்கத்தை  சில சுலப வேலைகளில்  கொண்டு வாருங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்...சிறிய சிறிய கணக்குகளுக்கு கால்குலேட்டர் வேண்டாம்..புதிர்கள், லாஜிக்கல் விளையாட்டுகள்..மேஜிக்கின் ட்ரிக்கை கண்டுபிடிப்பது என்று வேலை கொடுத்துகொண்டே இருங்கள்...அதுவே ஒரு ஜாலியான விளையாட்டாகவும் அதே நேரம் நம் வாழ்க்கைக்கு அவசியமான நேரங்களில் வேகமாக செயல்படவும் மூளை தயாராக இவையாவும் உதவும்.

                                                                                      (ஜனவரி 2015 )