என்னை பற்றி

 உங்கள் வருகை இனிதாகுக!

இந்த இணையதளம் மூலம் நான் பார்த்த / ரசித்த / விடயங்களையும்....எல்லாவற்றையும் பற்றிய (மதத்தை குறித்த விஷயங்கள் தவிர்த்து..) எனது பார்வையையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....

எனது இந்த இணையத்தளம்...பேஸ்புக்...ட்விட்டர்  இந்த மூன்றிலும் வெளிபடுத்தும் எண்ணங்களே எனது உருவத்தையும்...எண்ணங்களையும் வெளிபடுத்திவிடும்...ஆகவே தனியாக என்னை பற்றி எழுத ஒன்றுமில்லை....

இந்த இணையதளத்தில் விரிவாக சொல்ல வருவதையே எழுதுகிறேன்....அன்றாட நிகழ்வுகள் குறித்த பார்வைகளை பேஸ்புக் மற்றும் ட்விட்டெரில் பதிவிட்டு வருகிறேன்.

எல்லாவற்றையும் அறிந்திட துடிக்கும் ஒரு மனிதனாக இருக்க விரும்புகிறேன்..தினமும் புதிதாக எதேனும் கற்றுக்கொள்ள விரும்பும் மனிதனாக வாழ்ந்து மரிக்க விரும்புகிறேன்...அம்புட்டுதான்!

எனக்கு மிக பிடித்த வரிகள்  ( பாரதியுடையது )

தேடி சோறு நிதம் தின்று

பலசின்னஞ் சிறு கதைகள் பேசி

மனம்வாடி துன்பம் மிக உழன்று

பிறர்வாட பல செயல்கள் செய்து

நரைகூடி கிழப் பருவம் எய்தி -

கொடும்கூற்றுக்கு இரையென மாயும்

பலவேடிக்கை மனிதரை போலே

நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?