The Bucket List

எனது வாழ்நாள் கனவுகள்... 

எனக்கு பிடித்த - படித்த ஆயிரம் புத்தகங்கள் / நான் ரசித்த நூறு தமிழ் திரைப்படங்கள் / நூறு மற்ற மொழி திரைப்படங்கள் / இசை ஆல்பங்கள் கொண்ட நூலகம் வைக்கவேண்டும்.

ஒரு குறும்படம் இயக்கவேண்டும்

நான் எழுதிய ஒரு புத்தகம் வெளியிடவேண்டும்

ஏதேனும் ஒரு பாடல் நான் முறையாக பாடி ரிகார்டிங் செய்யவேண்டும்

டாக்டர் பட்டம் வாங்கணும் ( Phd )

ஒரு முறையாவது இந்திய அளவிலான செஸ் டோர்ணமென்ட் இல் ( Under 1600 Rating ) முதலிடம் வரணும்.

பைக்கில் குறைந்த பட்சம் தனியாக 5000 KM  குறையாமல் இந்தியாவிற்குள் சுற்றணும்.

பெரிய அளவிலான குவிஸ் ப்ரோக்ராம் ஒன்றை ஞாபகத்தில் உள்ள தகவல்களை வைத்தே நடத்தவேண்டும்.

ஒரு குழந்தையை தத்து ( SPONSOR ) எடுக்கவேண்டும்.

குறைந்த பட்சம் 5000 மீட்டர் உயரம் உள்ள இடத்துக்கு ட்ரக்கிங் போகணும்.

பனிசறுக்கு விளையாடவேண்டும் 

பாட்மிண்டன் விளையாட்டு மைதானம் எனக்கென்று சொந்தமாக வைக்கவேண்டும்.

பிரயாண /சொகுசு  - கப்பலில் ஒரு வாரமாவது பயணம் செய்யணும்.

ஒரு வெளிநாட்டு மொழியை ஓரளவுக்கேனும் பேசும் அளவுக்கு கற்றுகொள்ளணும்.

நியூயார்க்  -சிங்கப்பூர் -லண்டன் இம்மூன்று நகரங்களுக்கும் ஒருமுறை சென்று வரணும்.

ஒலிம்பிக்கை நேரில் சென்று ரசிக்க வேண்டும்.

பங்கி ஜம்பிங் ( Bungee Jumping) செய்யணும்.

பாரசூட்டில் குதிக்கணும்.