"விஸ்வநாதன் ஆனந்த் - சச்சின்" ஒரு பார்வை


கிரிகெட்டை (சச்சினின் சாதனைகளை) புல்லரித்து போய் பார்த்ததற்கு  பிரதான இரண்டு காரணங்களாக எனக்கு தெரிவது .,

கிரிக்கெட் விளையாடுபவர்கள்
சினிமாவை போல் கிரிக்கெட்டை ரசிப்பவர்கள்

இந்தியாவிற்கு கிரிகெட்டை பொறுத்தவரையில் சச்சின் மற்றும் சிலர்., ., செஸ் விளையாட்டிற்கு இந்திய முழுவதும் நன்கு அறிந்த ஒரே செஸ் பிளேயர் - விஸ்வநாதன் ஆனந்த் மட்டும்தான்!!


சச்சினுக்கும் ஆனந்த்துக்கும் உள்ள சில தனிப்பட்ட ஒற்றுமை குணங்கள்

இரண்டு பேருமே சாத்வீகத்தின் குழந்தைகள்

பாரத ரத்னா விருதை தவிர்த்து இந்திய அரசினால் கொடுக்கப்படும் எல்லா தனி நபர் விருதுகளையும் வாங்கி முடித்தவர்கள் ( ஆனந்த் சற்றே முன்னாடி வாங்கிவிட்டார்!சச்சின் அதனையும் வாங்கிவிட்டார் )

சுய ஒழுக்க கட்டுபாடுகள் மிக்கவர்கள்

வெற்றி தோல்வியின் போது சட்டைய கலட்டி உற்சாகம் \கோவம் காட்டாதவர்கள் .செஸ் விளையாட்டில் அதிக பட்சம் கோவம் ( தோற்கும் போதுதான்!!) வந்தால் சேரை சடக்கென்று தள்ளிவிட்டு வெளியேறுவார்கள்.

சக வீரர்களிடம் பகமை காட்டாதவர்கள் ., ஆனந்த் இதுவரை எந்த வீரரிடமும் பகைமை காட்டாதவர்., ஆனால் மற்ற வீரர்கள் ., அவர்களுக்குள் பகைமை காட்டுவார்கள்., விளையாட்டின் போது கைகுலுக்க மாட்டார்கள் )

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக உலக அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் இருந்து வருவது ஆனந்தின் தனி சிறப்பு!

கடந்த இருபது நாட்களாக நடந்து வந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் மொத்தம் பனிரண்டு கேம்கள் ., அதில் ஆனந்த் மூன்றையும் , எதிர்த்து விளையாடிய டோபொலோ இரண்டையும் வெற்றி பெற்றனர்., மீதி எழு விளையாட்டுகள் டிராவில் முடிவடைந்தன.இந்த வெற்றியின் மூலம் நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்யர் அல்லாத ஒருவர் என்ற பெருமையும், ஐந்து கோடிக்கும் மேல்பட்ட பரிசு தொகையும் வென்றுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் அதிக அங்கீகாரம் பெறுவதில் எந்த பொறாமையும் இல்லை., ஆனால் மற்ற விளையாட்டுகளையும் சற்று கவனித்து வந்தால் நன்றாக இருக்கும் என்பது நமது சொந்த கருத்து! கடந்த 2001 இல் தான் செஸ் விளையாட்டு எனக்கு அறிமுகமாகியது., அதன் பின்பு அந்த விளையாட்டை சிறிது உற்று நோக்கியதில் அது சற்று கை கூடி வந்தது ., ஒரு வேலை செஸ் விளையாட்டு சிறிய வயதிலேயே அறிமுகபடுத்திருந்தால் இந்த கட்டுரையை படிக்கும் அவல நிலை(?!) உங்களுக்கு வராமல் இருந்திருக்கலாம்.

இந்திய அளவில் கவனிக்க படாமல் புறகணிக்க படும் பல முன்னணி கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள் நிலைமை ஆனந்துக்கு இல்லை என்றே சொல்லவேண்டும்., இந்திய முழுவதும் நன்கு பிரபலம் என்பதோடு ., நல்ல ஸ்பான்சர்கள், வெற்றிகள் மூலம் நிறைய பரிசுத்தொகைகள்., என ஆனந்த் ஆனந்தமாகவே இருக்கிறார்.

அவருக்கு நமது வாழ்த்துகளை சொல்லிவிடுவோம்.


ஜூன் 2015