கேள்வி -பதில்கள் -1

சுஜாதாவின் பதில்கள் என்று எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அத்தனையும்., வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சுகமான அனுபவமே தரும்., அறிவியல் பதில்கள் சற்று கஷ்டம் என்று அதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களே தயங்கியபோது , இவரின் " ஏன்? எதற்கு? எப்படி" புத்தகத்தின் வெற்றியை பற்றி சொல்லவேண்டியதில்லை.,

இரண்டு வருசமா வாசகர்களின் கேள்விக்கு ( மெய்யாலுமே சார்....) பதில் சொல்லி தொலைச்சிட்டேன்., அந்த பதில்களில் ஏதோ ஒன்னு ரெண்டு நல்லதா தெரிஞ்சுது.. அததான்...... இப்ப..... பதிவா..... ஹி..ஹி...ஹி...)


யானையின் தந்தத்தை பற்றி கொஞ்சம்.. ப்ளீஸ் ....?
-முபீனா, சொளுக்கார் தெரு, காயல்பட்டணம்

யானையின் மேல்தாடையில் உள்ள வெட்டுப்பல்தான் தந்தமா மாறி, நவநாகரீக மனிதர்களின் வேட்டைக்கு காரணமாகிறது. இங்கிலிஷ்ல இதுக்கு பேரு டாஸ்க் (task) .ஆசிய யானைகள், ஆப்ரிக்க யானைகன்னு இரண்டு முக்கிய வகை இருந்தாலும், ஆப்ரிக்க யானைகளில் ஆண்/பெண் இரண்டுக்கும் தந்தங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும்.


வருடத்திற்கு 15லிருந்து 18 சென்டிமீட்டர் வரை வளரும் தந்தம் யானையின் வாழ்நாள் முழுவதும் வளரும் தன்மை கொண்டது. தந்தக்குள் பாதி இடம் மூங்கில் கம்புக்குள் இருப்பது போல் வெற்றிடம் இருக்கும். ஏறக்குறைய 95% “டென்டைன்” என்ற வஸ்துவால் ஆனது தந்தம். தந்தத்தை மனிதர்கள் அலங்கார பொருட்களுக்காகதான் அதிகம் விரும்புகிறார்கள். பியானோ கருவியின் கட்டைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.கொசுவை ஒழிக்கவே முடியாதா? காலம் பூராவும் கொசுவத்தி சுருள்தானா? திலகா - சென்னை

அமெரிக்காவாகட்டும், ஆப்பிரிக்காவின் அல்ஜிரியா நாடாகட்டும் எல்லா நாட்டுக்கும் இருக்கும் தலைவலி கொசு. பூகம்பம், மற்றும் இயற்கை பேரழிவுகளால்தான் மனித இனத்தில் அதிகபட்சம் மரணம் நடைபெறுகிறது என்பது உண்மையல்ல. உலகத்தில் வருடத்திற்கு 20 லட்சம் பேராவது இந்த கொசுவால் மரணமடைகிறார்கள்.

கொசு பலவகைகள் இருந்தாலும் “ஏடிஸ் °”, “அனஃபேலிஸ் °”, ‘கியூலக்ஸ்°’ ஆகிய வகை கொசுக்கள்தான் பயங்கர வகை கொசுக்கள்.

அமெரிக்காவில் கொசுவை விரட்ட இயற்கை முறைகள் தான். துளசி, எலுமிச்சைப்புல், எலுமிச்சை பசைச்செடி போன்றவற்றை வளர்ப்பது, ‘சிட்ரோனெல்லா’ மற்றும் ஜெரானிடம் எண்ணெய் கொழுப்பில் செய்யப்பட்ட மெழுகு வார்த்திகளை எரியவிடுவது, மின்னியல் பொறிகள் இப்படி பல வகை முயற்சிகளில் தப்பித்து செவ்வனே வாழ்கிறார்கள். இந்தியாவில் விற்கப்படும் கொசுவிரட்டி வில்லைகள், திரவங்கள் பெரும்பாலும் ‘பைரித்ராய்டு’ ரசாயனங்களால் தயாரானவைதான். தொடர்ச்சியாக பயன்படுத்தினால் இருமல், மூச்சிரைப்பு, மூச்சு வாங்குதல், தோலில் அரிப்பு, கொப்புளம், தைராய்டு சுரப்பி பாதிப்பு... இப்படி பல பிரச்சனைகள்.

உலகெங்கும் கொசு உள்ள நாடுகளில் தப்பித்து வாழ்வது எப்படி என்று தான் பார்த்து வாழ்கின்றார்கள். ஒழிக்க முடியாதா? என ஏங்குபவர்களுக்கு “பேரி காமனரி”ன் இயற்கை விதிகளை சொல்லாம். சொன்னால் இதற்கு பேசாமல் கொசுக்கடியே பரவாயில்லை என்று முறைப்பீர்கள்.


தூக்கம் என்பது ஏன்?
பாரூக், மசூதி தெரு, சாத்தான் குளம்.
உடல் உறுப்புகள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள தூக்கம் தான் முக்கியம் நமது உடம்பில் உள்ள பயாலாஜிகல் சமாச்சாரங்கள், தூக்கத்தை சரியான முறையில் பின்பற்றுபவர்களின் உடல், மற்றும் பாதங்களை சுறுசுறுப்பாகவும் நல்லநிலையிலும் வைத்திருக்கின்றன. இதயதுடிப்பு குறைந்து, மூச்சு சீராகி, அப்படியே... ஒரு சின்ன மரணம் நிகழ்ந்து காலையில் எழும்பி, விட்டேனா பார் .! என்று மற்றவர்களுடன் போட்டி போட ஆரம்பித்துவிடுகிறோம்.

தூக்கமே இல்லாமல் சாதாரண மனிதர்களால் இரண்டு நாட்களுக்குமேல் தாக்குபிடிக்க முடியாது. உடலின் மற்ற பாகங்கள் எல்லாம் ஓய்வெடுத்த பின்பு தான் மூளை சற்று ஒய்வெடுக்க ஆரம்பிக்கும். தூக்கத்தில் ரெம் (REM) வகை ஆழ்ந்த தூக்கத்தில்தான் மூளை ஒய்வெடுக்க ஆரம்பிக்கும். சரியான அளவு தூக்கத்தை உங்கள் உடம்பே தேர்ந்தெடுக்கும். மனசுதான் அதிக நேரம் தூங்க ஏங்கும்.

சரியான தூக்க கால நேரத்தை (SLEEPING HOURS) தேர்ந்தெடுப்பது ரொம்ப ஈஸி. சுமார் 7 மணி நேரம் நன்கு தூங்கி எழுந்து பாருங்கள். அந்த நாள் உங்களால் உண்மையாக சுறுசுறுப்பாக இருக்கமுடிந்தால், உங்களுக்கு7 மணி நேரம் போதும்.ESP POWER என்றால் என்ன? அது உண்மைதானா?
பாத்திமா சிரீன், அம்பல மரைக்கார் தெரு, காயல்.

Extrasensory Perception (ESP) (ESP) எனப்படும் இந்த வகையறா விஷயங்கள் கொஞ்சம் ஆளை அசத்தும் விஷயம். நடக்க போகும் விஷயங்கள் இந்த ESP சக்தி உள்ளவர்களுக்கு தெரியும் என்பார்கள். பல கதைகளும், சில நம்பதகுந்த கதைகளும் கூட உண்டு. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபடாத இந்த சக்தி இன்னும் சில நாடுகளில், சில மாதிரிகளிடையே மிகவும் நம்பபடுகிறது. ஜோதிடர்கள் கூறும் பத்து விஷயங்களில் இரண்டாவது நடக்கும். ஏன்? நீங்கள் சொன்னால் கூட ஒரு விஷயம் நடக்கும். காரணம் நம் பாசையில் குருட்டாம்போக்கு.

அறிவியலை பொறுத்தமட்டில் மூளையில் ஏற்படும் நினைவலைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுசிறு டிராபிக் ஜாம்தான் ESP. நம் எல்லோர்க்கும் இந்த சக்தி அபூர்வமாக வந்து, அடுத்து நடக்க போகும் சில விஷயங்கள் முன்னயே தெரிய வரும். அதற்கு காரணம் மேலே குறிப்பிட்டதுதான்.

சில நேரங்களில் நமது நண்பர்கள் கூட திடீரென்று "இப்ப பாரேன் 'ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு' பாட்டு வரும் என்பார்கள் , அந்த பாட்டு கூட நீங்கள் போகும் வழியில் அடுத்து கேட்கக்கூடும், அதற்க்கு காரணம் அவர்க்கு காது கொஞ்சம் ஷார்ப்பா கேட்குதுன்னு அர்த்தம்., ஆனா ஒரு நாள் கூட நீங்கள் அதிகம் கேட்டிராத பிரபலமில்லாத பாட்டு ஒன்னை அப்படி வரும்ன்னு சொல்லமாட்டாரு...சூரியன் மறையும் நேரத்தில் அது மஞ்சள் நிறமாக தெரிய காரணம்?
முகமது மபாஸ் , கோமான் நடுத்தெரு, காயல்பட்டணம்


முதலில் கலர் என்பது ஒரு பொருளின் மீது வெளிச்சம் பட்டு அது நம் கண்களுக்கு வந்து விழும் அந்த நிறம்தான் நாம் பார்க்கும் அந்த பொருளின் நிறம். இருட்டான அறையில் அந்த பொருளின் மீது வெளிச்சம் படாததால் தான் எந்த பொருளும் தெரிவதில்லை.

சூரியனின் நிறம் வெவ்வேறாக தெரிவதற்கு காற்றில் உள்ள மூலக்கூறுகள் (MOLECULES) சம்பந்தப்பட்ட விஷயம். காற்றில் எந்த அளவிற்கு மூலக்கூறுகளின் தன்மை இருக்கிறதோ அந்த அளவிற்கு சூரியனின் நிறங்களின் மாற்றங்கள் தெரியும். அப்படி தெரிகின்ற காரணம் சூரியன் அல்ல, ஏற்கனவே சொன்னது போல் காற்றில் மிதக்கின்ற மூலக்கூறுகள்தான் காரணம்,