கேள்வி பதில்கள் - 2


எரிகற்கள் என்பது என்ன? எப்படி உருவாகுது? அப்துல் - சென்னை.

எரிகற்கள் (meteoroids) என்பவை வால் நட்சத்திரங்களின் மிச்ச பகுதிதான். அதில் இருவகை உண்டு. உலோக எரிகற்கள், நிக்கல் இரும்பு சத்துடன் உள்ளது இன்னொன்று, வானத்திலிருந்து விடுபட்டு ஏதோ ஒரு திசையில் பயணிக்கும் பொழுது சில நேரம் பூமியை நோக்கியும் வருவதுண்டு, அப்படி வந்தால், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் போது, காற்றுடன் உராய்ந்து எரிந்துவிடும். ஒருவேளை பெரிய கற்களாக இருந்தால் எரிந்தது போக, மீதி பூமியில் விழும். சுமார் 100 கிலோ மீட்டர் வானவெளியில் எரிந்து கொண்டே வரும் சின்ன சின்ன கற்களை நீங்கள் சில நேரம் இரவு நேர வானத்தில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.


பல கிரகங்களுக்கு நடுவே சிறியது முதல் பெரியது வரையிலான பல எரிகற்கள் அவ்வப்பொழுது பூமியில் அம்மாதிரி வந்து எரிந்து போவதுண்டு. ஒரு வேளை பெரிய கல் வந்திருந்தால்....? வந்திருக்கிறது 1908 ஜுன் 30ல் ரஷ்யாவின் மத்திய சைபீரிய பகுதியில் ஒரு ராட்சத தீக்கோலம் போல கீழே விழுந்து ஒரு பெரிய கால்பந்து மைதானம் அளவிற்கு பள்ளத்தையும் ஏற்படுத்தியது எரிகற்கள். பின்னர் ஆராய்ச்சி செய்து பார்த்து அந்த பாதிப்பு வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதி தாக்கியதால் உண்டானது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

‘துங்கங்கா’ நிகழ்ச்சி என வரலாற்றில் பதிந்திருக்கிற நிகழ்ச்சி இது.



பூமியிலிருந்து எவ்வளவு தூரம் காற்று மண்டலம் உள்ளது? எத்தனை வாயுக்கள் உள்ளது?
சிராஜுதீன் - பாண்டிசேரி

நம் பூமியை சுற்றி வாயு மண்டலம் பல பிரிவுகளின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. நைட்ரஜன் 75ர% ஆக்ஸிஜன் 20ர% மற்றவைகள் மீதி 2 % என்ற விகிதாசாரத்தில் வாயுமண்டலம் அமைந்திருக்கிறது. இந்த கலவைகளின் மொத்த பெயர்தான் காற்று. இந்த காற்று மண்டலம் தான், நேரடி சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் அதிக குளிர்ச்சி போன்ற விஷயங்களை சிறிது மட்டுப்படுத்துகிறது.

இந்த உயரத்திலிருந்து இந்த உயரம் வரைக்கும் என்று எதுவும் தனியாக பிரிக்க முடியவில்லை. போக போக உயரம் கூட கூட வேறொரு வாயு மண்டலத்தில் புகுந்துவிடலாம். தோராயமாக கடல் மட்டத்திலிருந்து 20கிலோ மீட்டர் தூரத்தை கணக்கிட்டு அதற்கு ‘கர்மன் லைன்’ karman line என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்கு அப்புறம் உள்ளவை outer space எனப்படும் இன்னொரு வாயுமண்டலமாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.

EXOSPHERE - சுமார் 500KM மேலே உள்ளவைகளை குறிப்பிடுவார்கள். THERMOSPHERE சுமார் 80 முதல் 85 KM வரை MESOSPHERE சுமார் பூமியிலிருந்து 50 KM மேலே, எரிகற்கள் தீப்பிடித்து சாம்பலாகும் பகுதி இது.

STRATOSPHERE இது இரண்டாவது பெரிய வாயு மண்டலப்பகுதி. இது சுமார் பூமியிலிருந்து 50 KM வரை இதுதான் பூமியின் அடிப்பகுதி. 75 % வாயு மண்டலத்தின் மொத்த மூலக்கூறுகள் இதற்குள்தான். சுமார் 11 KM உயரம் வரை பரவிக் கிடக்கும்.


கிரிக்கெட் வீரர்கள் அளவிற்கு மற்ற விளையாட்டு வீரர்கள் யாரும் அதிகம் சம்பாதிக்கிறார்களா? - யேசுராஜ், அதிரை

நம்நாட்டை பொறுத்தமட்டில் கிரிக்கெட் வீரர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மை. மக்களின் வரவேற்பு மற்றும் அதனால் புழங்கும் கோடிகணக்கான பணம் போன்றவைகளால் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் உலகளவில் அதிகம் சம்பாதித்ததாக அறியப்படும் ‘டைகர் வூட்ஸ் ’ கோல்ப் விளையாட்டில் உலக சாம்பியனாக இருந்தவர், இப்பொழுதும் அடிக்கடி முன்னிலையில் இருக்கிறார். கார் பந்தயவீரராக இருந்த “மைக்கேல் ஷீமேக்கர்” உலகில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். நம் நாட்டில்..., கிரிக்கெட் வீரர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

அதிகம் பேருக்கு தெரியாத விளையாட்டாகிய செஸ் போட்டியில் தமிழ்நாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்த் வருடத்திற்கு பல கோடிகளை சம்பாதிக்கும் வீரராவார். 2013 நடந்து முடிந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதற்கு ஆனந்த் வென்ற பணம் ரொம்ப கொஞ்சம்தான்... 6.25 கோடி!



ஒரு ஊரில் மழையின் அளவினை எப்படி கணக்கிடுவார்கள்?
அபுபக்கர் - கல்ப் டெக்ஸ் - மெயின்ரோடு, காயல்பட்டணம்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் விழுகின்றது என்பதை அதன் உயரத்தில் உள்ள அளவை வைத்து குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக காயல்பட்டணத்தில் 2 செ.மீ. மழை பெய்தது என்று அறிவித்தால், அதன் அர்த்தம் “காயல்பட்டணத்தின் மொத்த பரப்பளவு முழுவதற்கும் 2 செ.மீ. உயரம் தங்க கூடிய அளவிற்கு மழை பெய்தது என்று அர்த்தம். அந்த 2 செ.மீ. தண்ணீரை மண் பகுதி உடனே உறிஞ்சுக் கொள்ளும். ரோடாக இருந்தால் மெதுவாக உறிஞ்சிக் கொள்ளும்.