கேள்வி பதில்கள் - 3

நன்றாக சாப்பிட்டதும் ஒரு மாதிரி மந்த நிலை (தூக்கம்) வருவதேன்?
அமீர் - காயல்பட்டணம்

சாதாரணமாக தெரியும் நம் மூளை நாம் சுவாசிக்கும் காற்றில் 50% சதவீதக்கும் மேல் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும், இரத்த ஓட்டத்தை பொறுத்தவரையிலும் கூட அப்படிதான். நீங்கள் நன்றாக சாப்பிட்டால் உடனே உங்கள் வயிறு உணவை செரிமானம் செய்ய இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜனையும் பங்கு போட வரும் பொழுது, மூளை தனக்கு உரிய இரத்தம் வராமல் கொஞ்சம் ஸ்தம்பிக்க, மந்த நிலை ஆரம்பம்.

நம் உடம்பிலேயே மிகவும் பசி கொண்ட உறுப்பு மூளைதான். அதற்கு ஆக்ஸிஜனும், இரத்த ஓட்டமும் அதிகமாக வேணும்.



இடி விழுந்து சாவு - எப்படி?
(காயத்திரி, பேராவூரணி )



இடி என்பது ஓரு பெரிய கல் என்பது போன்றோ, அல்லது கனத்த இரும்பு துண்டு என்பது போலவோ, உள்ள விஷயம் அல்ல. மேகங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான கிலோ வோல்ட் மின்சக்தி பூமியில் சில உயரமான பொருட்களுடம் ஸ்பார்க் அடிக்கும் அந்த மின்சாரம்தான் இடி, நீங்கள் காதில் இடிசத்தம் கேட்டது என்று சொல்வது, மின்னல் உருவாகும் சமயத்தில் வருகின்ற சத்தம் தான் அது. மின்சாரம் ஒன்று கூடி ஒரு இடத்தில் பயங்கரமான வோல்டேஜ் சக்தியுடன் தாக்குவதுதான் நம்மை காலி செய்யும் இடி பச்சைமரம் உட்பட எதுவும் இதன் முன் கருகிவிடும்.

உங்களுக்கு
தெரிந்த\பத்திரிகையில் படித்த ஒருவர் இவ்வகையில் இடிதாக்கி இற�pan> ருந்தால், அதை அவர் உணரும் முன்னே இறந்திருப்பார். அவ்வளவு சக்தி.



மாரடைப்பு பற்றி. !?
( மாலதி, சென்னை)

இந்தியாவில் பரவி வரும் நோய்களில் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோயை போல வெளிநாடுகளிலும் (ஏன். . .இந்தியாவிலும் கூட) அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் பிரச்சனை ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்புதான், பெரும்பாலும் ஆண்களுக்கு, அதிலும் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்த மாரடைப்புக்கான சாத்திய கூறுகள் அதிகம். இதயம் எல்லா பகுதிகளுக்கும் ரத்தம் சப்ளை செய்யும் குழாய்களை கரானரி ஆர்ட்டரிஸ் என்பார்கள், மொத்தம் இரண்டு குழாய்கள் உண்டு. இவைகளை அடைப்பு ஏற்படும் போதுதான் சிக்கல்.


மாரடைப்பு ஏற்பட காரணம் பல. அவைகளில் சில, அதிகம் அலட்டிக் கொள்ளும் போது, நிறைய சாப்பிட்டபின், ரொம்ப குளிர் அனுபவிக்கும் போது,மேற்சொன்னவைகளும் கூடி நின்றால் 90 சதவீதம் மாரடைப்புக்கு வாய்ப்பு. மாரடைப்பை உணரும் வகைகளில் சிலர் பொதுவாக மார்பின் நடுவில் வலி வரும், அதிகமாக வேர்க்கும், மூச்சு திணரும் ரத்தம் இல்லாமல் பல்ஸ் சடாரென்று குறைந்து நினைவிழக்கும், இப்படி சிலவற்றில் ஒன்றை உணர்ந்தால் கூட, அடுத்த ஓரு மணி நேரத்திற்குள் .சி.யு.வில் (இன்டன்சிவ் கேர் யூனிட் சேர்ந்தால்) பிழைத்துவிடலாம்.



ஆண்களுக்கு மட்டும் வழுக்கை ஏன்?
(சாதிக் பாட்சா - காயல்பட்டணம்)

பயமோ அதிக குளிரோ உணரும் பொழுது நம்முடைய சருமத்திற்கு கீழிருக்கும் அர்ரேக்டேஸ் பைலோரம் என்கிற தசை இருகி அதனால் சருமம் இழுக்கப்பட்டு மயிர்கால்கள் நிற்கின்றன. நம் தலையில் சராசரியாக 2 லட்சம் முடிகள் வரை இருக்கின்றன. அவைகள் மாதத்திற்கு சராசரியாக அரை அங்குலம் வீதம் வளர்கின்றன. பெண்களுக்கு வழுக்கை வருவது மிக அரிது. மெனோபாஸுக்கு பிறகு அவர்களும் கொஞ்சம் முடி துறப்பார்கள். கர்ப்பத்தின்போது ஹார்மோன் அளவு அதிகமாவதால் பெண்களுக்கு கூந்தல் நிறைய வளரும். பிள்ளை பெற்றபின் ஆறுமாதம் முடி உதிருதல் அதிகமாக இருக்கும். பின்பு சரியாகிவிடும்.

ஆனால் ஆண்களுக்கு வம்சாவளி சமாச்சாரம் எல்லாமல் பார்க்கவேண்டும். கற்கால மனிதனிலிருந்து இன்று வரை உள்ள காலகட்டத்தில் முடி இழப்பது (வழுக்கை) கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. அதில் நம் பெற்றோர் மாமா, வம்சம் போன்ற சமாச்சாரங்களையும் அலசி பார்த்தால் நமக்கு வழுக்கை வருவதை சற்று எதிர்பார்க்கலாம். மேலும் ஆண்ட்ரேஜென் என்கின்ற வகை சுரப்பிகள் செக்ஸ் சம்பந்தமான ஆண்கள் வகை சுரப்பிகள் அதிகமானால் நிச்சயம் முடி உதிர்வது அதிகமாகும்.



மலைபிரதேசங்களில் குளிர்ச்சியான க்ளைமேட் எப்படி வருகின்றது.? (ஷைலஜா , சென்னை)


சூரிய ஒளியை கடல் மட்டத்திற்கு சமமாக இருக்கும் அடர்த்தியான காற்று கிரகித்து நமக்கு தருவதால் கொஞ்சம் வெப்பம் அதிகம். மலைமேல் இருக்கின்ற அடர்த்திக் குறைந்த காற்றுமண்டலம் கிரகிக்க முடியாமல் சூரிய ஒளியின் வெப்பம் குறைந்து குளிர் தெரிகிறது.

ஓரு சின்ன பரிசோதனை இது. நீங்கள் ஊட்டி போன்ற மலை பிரதேசங்களுக்கு செல்லும் போது செய்து பாருங்கள். ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலை நன்றாக மூடி வைத்துக்கொள்ளுங்கள். மலையின் உச்சியை தொட்டபின் பாட்டிலின் அடைப்பட்டிருந்த காற்று மிகுந்த சத்தத்துடன் வெளியே வரும். பின்பு அதே பாட்டிலில் நன்றாக மூடி மலையை விட்டு கீழே இறங்கியவுடன் பாட்டிலை நன்றாக பாருங்கள் அது கண்டிப்பாக சிறுதளவாவது யாரோ கையால் பிடித்து நைத்தது போல் இருக்கும். காரணம் சமமட்டத்தில் இருக்கும் காற்று அடர்த்தியாக இருப்பதால் பாட்டில் உள்ளே இருக்கும் குறைந்த காற்றழுத்தத்தை சமன்படுத்த இந்த காற்று முயற்ச்சித்ததால் பாட்டில் நைத்து போயிருக்கும்.

பெங்களூர் குளிராக இருப்பதற்கு காரணம் அது கடல்மட்டத்திலிருந்த சுமார் 850 மீட்டருக்கு மேலே இருப்பதால்தான். கோயம்புத்தூர் சென்னையை போல் வெப்பம் அதிகமாக இல்லாமல் இருப்பதற்கும் அது 450 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேலே அமைந்திருப்பதும்தான் காரணம்.


அறிவியல் சம்பந்தபட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்ல என்னால் முடியாது. என்னுடைய ஆரம்ப கல்வியினாலும், எனது புரிந்து கொள்ளும் தகுதியும் தான் எந்த கேள்விக்கு பதில் அளிப்பது என்பதை முடிவு செய்கிறது. இயந்திரவியல், இயற்பியல் என்று பல பிரிவுகளிலும் உள்ள விஞ்ஞான விளக்கங்கள் தெரிந்து கொள்ள ரொம்பவும் ஆசைதான். என்னுடைய அடிப்படை திறனில் அது இயலாத காரியமாய் இருக்கிறது.

முடிந்தவரையில் ஒரு கேள்விக்கு பல நூற்களிலிருந்தும், ( சுஜாதாவின் பங்கும் ) இணையத்தளத்திலிருந்தும் படித்ததை தொகுத்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறேன். முயற்சியின் மதிப்பெண்களை நீங்கள்தான் சொல்ல வேண்டும். வெள்ளிநிலாமற்றும்மக்கள் ஒளிஎன்னும் மாத இதழ்களில் அறிவியல் சம்மந்தப்பட்ட கேள்வி பதில்களுக்கு   வருகிறேன். அவைகளில் சில அவ்வப்பொழுது உங்களுக்காக........