கேள்வி - பதில்கள் -4

எரிமலைகளை பற்றி சொல்லுங்கள்!
பாத்திமா-காயல்பட்டணம்.

பூமியின் உட்புற பகுதியில் வெப்பத்தின் காரணமாக ஒருவகை குழம்பு (இதை ‘மேக்மா’ என்று சொல்லுவார்கள்) உருவாகும். பாறைகள் பலவும் அதிக உஷ்ணத்தால் குழம்பாய் மாறிவிடும். பின்னர் நம் பூமிகட்டுக்கள் சந்திக்கும் இடங்கள் மூலமாக வெளியேற பார்க்கும், முடியாமல் போகவே ஒரு சிறுமலை போன்று நாளடைவில் உருவாகி, எப்படா வெளியே போய் ‘மேக்மா’ குழம்பை கக்கலாம் என்று உறுமிக்கொண்ட காத்திருக்கும்.


ஏதோ ஒரு பூகம்பம் அந்த பகுதியை லேசாக ஆட்டிவிட்டு போனால்.... அவ்வளவுதான். அம்மா ஜிவ்வுனு மேக்மா எனப்படும் நெருப்பு குழம்பை ஆயிரகணக்கான அடி உசரத்திற்கு பீச்சி அடிக்கும். அந்த மேக்மா குழம்பில் அலுமினியம், இரும்பு, மக்னீஷியம், கால்சியம், பொட்டாசியம், டைடேனியம் எல்லாம் ஆக்ஸைடு வடிவத்தில் கிடைக்கும். (இதெல்லாம் கடல் மண்ணிலே கூட கிடைக்கும்).


20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிமலை சீற்றம் என சொல்லப்படும் ‘பினாடுபோ எரிமலை’ சீற்றம் மிகப்பயங்கரமாக தன்னை வெளிப்படுத்தியது. 1991ம் ஆண்டு ஜுன் 15ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த இந்த எரிமலையின் சீற்றம் சுமார் 1000 கிலோமீட்டர் சுற்றளவுக்கு தன் பாதிப்பை வெளிப்படுத்தியது. சீற்றத்திற்கு முன் சுமார் 1750 மீட்டர் உயரம் இருந்த எரிமலை, சீற்றம் முடிந்த பின்பு 1485மீட்டர் உயரம் தான் இருந்தது. சுமார் 260 மீட்டர் பாறைகள் வெடித்து சிதறி இருக்கின்றன.


இதில் உலகத்தின் பெரும் கவலையாக எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயம் “சீற்றத்தின் போது சுமார் 22லட்சம் டன் கந்தக டை ஆக்ஸைடு வெளியான விஷயம்தான். உயிர்சேதம் அவ்வளவாக கொடுக்காது. காரணம் முடிந்த ளவிற்கு அதன் சீற்றத்தை முன்னே கணித்து சுற்றி இருக்கும் மக்களை வெளியேற்றி விடுவார்கள்.


ஞாபக சக்தி அதிகமாக இருக்க ஏதேனும் வழிமுறைகளை பின்பற்றலாமா? பீர் முகமது - சித்தன் தெரு, காயல்பட்டணம்

நினைவாற்றல் என்பது ஓன்றும் பெரிய விஷயமில்லை. தேவைப்படும் பொழுது ஒரு விஷயம் நம் ஞாபக அறையிலிருந்து நமக்கு தெளிவாக வெளிப்பட்டால் அதை நல்ல ஞாபக சக்தி என்று நாமே சொல்லிக் கொள்வோம்.


ஒரு விஷயத்தில் நமக்கு இருக்கின்ற அதீத ஈடுபாடு அந்த விஷயத்தை நிச்சயம் மறக்கச் செய்யாது. சினிமா விஷயங்களில் இருக்கின்ற அந்த ஈடுபாடுதான் அந்த துறையை சார்ந்த அநேக கேள்விகளுக்கு பதில் சொல்ல வைக்கிறது.

மூளையை பொறுத்தமட்டில் அதில் காணப்படுகின்ற மிக மெல்லிய சரடுகள், மடிப்புகளில் ஞாபசக்தி அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். ஜன்ஸ்டீனின் மூளையை பல பரிசோதனைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் ஜீனியஸ் என்று எல்லோராலும் கருதப்பட்ட ஜன்ஸ்டீமீனின் மூளை ஆராய்ச்சிக்குரியது தான்.


மற்றபடி வெண்டைக்காய் தின்றால் ஞாபகசக்தி இருக்கும் என்பதும், வல்லாரை கீரை போன்ற சைவ பொருட்கள் அதிகம் தின்றால் ஞாபக சக்தி வளரும் என்பதெல்லாம் அவ்வளவாக அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை.
ஞாபகசக்தியை வளர்க்க எனக்கு தெரிந்த ஒரே வழி “செய்வதை மனதுக்கு பிடித்தமாகவும், விரும்பியும் செய்வதுதான்.”மரபணு சோதனை மூலம் தாய்-தந்தை யார் என்பதை அவ்வளவு துல்லியமாக சொல்லிவிட முடியுமா?
சாகுல் ஹமீது - கஸ்டம்ஸ் சாலை - காயல்பட்டணம்


முடியும் ! மரபணு (DNA கட்டட அமைப்பை ஓப்பிட்டு பார்த்து சொல்வார்கள். ஓரு பிள்ளையின் தகப்பன் இவர்தான் என்பதை 99.9 ரூ சதவீதமும், தாய் இவர்தான் என்பதை 100 சதவீதமும் உறுதியாய் கண்டுபிடிக்கலாம். டெஸ்ட் செய்ய ஓருவரது எச்சில், அல்லது ரத்தம் இருந்தால் போதும்.


பாழாய் போன சினிமாவில் யாருக்கு யார், தகப்பன், அல்லது பிள்ளை என்பதை இந்த மாதிரி மரபணு சோதனை கொண்டு கண்டுபிடிக்காமல் “குடும்பபாட்டு” ஒன்று பாடுவார்கள் பாருங்கள் பயங்கர காமெடி! “இவன் எனக்கு பிள்ளையே இல்லை” என்று இனி எந்த அப்பாக்களாலும் அவ்வளவு ஈஸியாக சொல்ல முடியாது-சினிமாவில் கூட இந்த டயலாக் எடுபடாது!

குறட்டையை நிறுத்த மருந்து ஏதும் உண்டா? ஷர்மிளா, வீரகேரளம் - கோவை.

சற்று உடல் பெருத்தவர்களுக்கும், மூக்கில் சிறு சுடைப்பு போன்ற பிரச்சனை உடையவர்களும் வாயினால் சுவாசிக்கும் பொழுது சற்று சத்தம் வரும். உலகமே தூங்கிய வேலையில் அமைதியான நிசப்தத்தில் குறட்டை சத்தம் நிச்சயம் எரிச்சலூட்டுபவைதான்.


இப்பொழுது அதற்கு ஸ்பிரே மாடலில் ஒரு எண்ணெய் தயாரித்திருக்கிறார்கள். பாதாம் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், நீலகிரி தைலம், இவற்றை யெல்லாம் கலக்கி வைட்டமின் B6,C,E ((பிரிடாக்ஸைன்) pyridoxis சேர்த்து தயாரித்திருக்கிறார்கள். தூங்க செல்லும்முன் குறட்டை விடும் கணவான்களின் உள்நோக்கிலும், தொண்டையிலும் ஸ்ப்ரே அடித்துவிட்டால், தொண்டையில் உள்ள தலைநார்களை மரத்து போக செய்து, குறட்டையை தடுக்கும்.
முன்னேறிய நாடுகளில் குறட்டை விட்டதெற்கெல்லாம் விவாகரத்து வாங்குவது ரொம்ப சாதாரணம்.


அப்ப நம் நாட்டில்?..... நம்ம வீட்டு பெண்களுக்கு பொறுமை அதிகம். பக்கத்து ரூமில் போய் தூங்கிகொள்வார்கள்.


பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவு தூரம்?
திலகா - சென்னை -1.
வானம் என்பது ஒர முடிவு அல்ல அது முடிவுறா வகையறா (infinte) நீங்கள் அண்ணாந்து பார்க்கும் வான வெளியில் தெரியும் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களுக்கு அப்பாலும் பல விஷயங்களை இருக்கின்றன நாமாக, நமக்கு மேலுள்ளதை வானம் என்று ஒரு பெயரிட்டிருக்கிறோம். அது ஒரு மனித அறிவுக்குள் அடங்கா பிரம்மாண்ட சமாச்சாரம் .


பக்கத்தில்??!! நம்மால் ஓரளவுக்கு துல்லியமாக இப்போதைக்கு கண்டுபிடித்திருக்கும் "ப்ரோசிமா செண்டோரி" என்கிற விண்மீன் இருக்கும் தூரம் நாலரை ஒளியாண்டு தூரம் ( ஒளி ஒரு செகண்டுக்கு மூணு லட்சம் கிலோ மீட்டர் வேகம் செல்லும்., இப்ப கணக்கு போட்டு பார்த்து வாய பிளங்க)