கேள்வி பதில்கள் - 5


கப்பல், விமானம், போன்றவற்றில் பயணம் செய்யும் பொழுது சில பேருக்கு மட்டும் வாந்தி வருகிறதே ஏன்?
(முகம்மது-சென்னை-108)

பயணத்தின் போது ஆடும் ஆட்டத்தினால் காதுகளுக்கு இருக்கும் பேலன்ஸ் மெக்கானிசம் தடைப்பட்டு, ஓரு வித குழப்பத்தில் வெளிவருவதுதான் தலை சுற்றல், மற்றும் வாந்தி.

அந்தமெக்கானிசம் இதுதான் - நம் காதுகளில் சின்ன ஒரு பள்ளத்தில் ஒரு திரவம் இருக்கும், நாம் எந்த பக்கம் சாய்ந்தாலும் அந்த திரவமும் அந்த பக்கம் சாயும், மூளை அதை புரிந்து கொண்டு அந்த பக்கம் சாய சொல்லும் அல்லது செய்யும் . ராட்டினத்தில் இருந்து இறங்கினதும் அந்த திரவம் இங்கும் அங்கும் அசைவதினால்தான் நாமும் அங்கும் இங்கும் சற்று ஆடி அடங்குவோம்.

உங்களுடன் வருபருக்கு வாந்தி வந்தால், முக்கியமாக இஷ்டப்பட்டுதான் உங்களுடன் வருகிறாரா என பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் பஸ் ஏறியவுடன் அவருக்கு வாந்தி வரலாம்.


வெங்காயம்
வெட்டும் பொழுது கண்ணீர் வருவதேன்?
(சர்மிளா - சென்னை)



வெங்காயத்தில் உள்ள ஒரு அமிலம் (ப்ரோப்பேன்தாயல் ஆக்ஸைடு) சுலபமாக ஆவியாகி கண்களை பாதித்து, பலன் கண்ணீர்.


பறவைகள் மட்டும் எப்படி மின்சார கம்பியில்...?
(சிவா - ஆவடி)

ஒரு கம்பியில் அமர்ந்தால் பறவைகளுக்கு மட்டும் அல்ல நமக்கும் ஒன்றும் ஆகாது. மின்சாரம் பாய வேண்டுமானால் இரண்டு கம்பிகளையும் கொஞ்சமேனும் தொடவேண்டும், தொட்டால் மற்றவர்கள் இன்சுரன்ஸ் கம்பெனிக்கு போன் போட வேண்டிவரும்.



அலர்ஜியை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
(பாஸ்கர் - சென்னை)

அலர்ஜியை பொருத்தமட்டில் அது ஓன்றும் பாக்டீரியாவை போன்று உடம்பில் உருவாகி வரும் நோய் போன்றதல்ல. பொதுவாக நம் உடம்பில் தற்காப்புக்காக இம்யுன் சிஸ்டம் (நோய் எதிர்ப்பு வகையறா) என்பது எல்லோருக்கும் உண்டு. சில நேரங்களில் சில வஸ்த்துக்களை நாம் விழுங்கும் போதே, தூசி போன்ற சமாச்சாரங்களை உடம்புக்குள் ஏதோ ஒரு வழியில் உள்ள போகும் போது இந்த இம்யுன் சிஸ்டம் குளறுபடி பண்ணி அலர்ஜி என்ட்ரி.

இந்த
வியாதிக்கு அலர்ஜி என பெயர் சூட்டியவ டாக்டர் க்ளெமன்ஸ் ப்செராய்ஹன். அலர்ஜி வருவது ஓவ்வொருவருக்கும் வேறு வேறு வகையில் வரும். ஒருத்தருக்கு முள்ளங்கி அலர்ஜி என்றால் இன்னொருவருக்கு கத்திரிக்காய்.

இது நமக்கு எந்த பொருளால் வருகிறது என்பதை தனிப்பட்ட ஒருவருக்கு ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடிப்பது என்பது சிரமமான விஷயமே. சில ஆண்டுகளுக்கு முன் இந்த அலர்ஜிக்கு காரணம் ஆராக்கிடோனிக் ஆஸிட் என்றும் கெமிக்கல் சமாச்சாரம்தான் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஓரு வேளை உங்களுக்கு கெட்ட விஷயங்களை பார்க்கும் பொழுதோ, அதைப்பற்றி பேசும் பொழுதோ அலர்ஜியாக உணர்ந்தால் டாக்டரிடம் போகாதீர்கள். உங்களுக்கு வந்த இந்த அலர்ஜி மட்டும் எல்லோருக்கும் வர இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.



பிளைட்டின் (flight) கருப்பு பெட்டி எதற்கெல்லாம் பயன்படும் ?
காமிலா - அதிரை

பிளைட் டேட்டா ரிக்கார்டர் (flight data recorder) எனப்படும் பிளாக் பாக்ஸ் உண்மையில் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள பொருள். எந்த ஒரு விமானமும் விபத்திற்குள்ளான பிறகு இந்த கருப்பு பாக்ஸை (ஆரஞ்சு பாக்ஸ்) தேடிப்பிடித்து அதில் கடைசியில் என்ன மாதிரியான வார்த்தைகள், சப்தங்கள் பதிவாயிருக்கின்றன என்பதை ஆராய்வார்கள், அதற்கு மட்டுமல்லாமல் முதலில் இயக்கி பார்க்கும் விமானங்களின் சேப்டி சம்பந்தப்பட்ட விபரங்களுக்கும் ஜெட் என்ஜீனின் செயல் திறன்களை பரிசோதிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.



எந்த
மாதிரியான விபத்தாக இருந்தாலும் இந்த பெட்டி மட்டும் பிழைத்துக் கொள்ளும். ரொம்ப அரிதாக சில தகவல்கள்களில் சில குறைகள் நேரிடலாம், அதுவும் அந்த விபத்தின் தன்மையை பொறுத்து.



ஈகோ (EGO) பிடித்த இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஜெயிக்க முடியுமா?
- கோப்பி அன்வர், பெரிய தெரு, காயல்பட்டணம்

முடியும் ! போட்டியென்று வந்தால் யாராவது ஒருவர் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் இங்கு ஈகோ பிடித்த இருவருமே ஜெயிக்க காரணம், ஒருவருக்கொருவர் தங்களது தோல்விகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஒருவேளை ஒப்புக் கொண்டால் அவர்களுக்குள் ஈகோ போய்விட்டதென்று அர்த்தம்.