பயணங்களும் நானும்

பொதுவாக பிரயாணம் செய்வது பலருக்கு ரொம்ப பிடிக்கும்...சிலருக்கு ரொம்ப கசக்கும். எனக்கு சிறுவயதில் இருந்தே பிரயாணம் பிடித்ததாகவே இருந்துள்ளதை பிற்பாடு அறிந்தேன். எனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரயாணம் பிடித்ததாகவே இருந்திருக்கிறது.

என்னை சுற்றி உள்ள எனது சொந்தம், நண்பர்கள் வட்டத்தில் அதிகம் பிரயாணம் செய்தவன் என்ற வகையில் நானும் ஒருவனாக இருப்பேன் என நினைக்கிறேன். நிறைய ஊர் சுற்றியவர்களுக்கு பொதுவாக பரந்த உலக அறிவு...பகுத்து அறியும் அறிவு போன்றவை நிறைய இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்..எனக்கென்னவோ அந்த பிரயாணம் எதன் நோக்கில் செய்யபடுகிறது என்பதை பொறுத்தே அது அமையும் என நினைக்கிறேன். எனது நெருங்கிய நண்பர் வண்டி கிளம்பியம் உடனேயே அது சேரும் இடம் எப்போதுடா வரும் என்று இருப்பார்...அதுவும் தனித்து பிரயாணம் செய்தால் மிகவும் கஷ்டபடுவதாக சொல்வார்.ஆகவே பிரயாணம் எதன்  நோக்கில் அமைகிறது என்பதை பொறுத்தே அதன் அர்த்தம் முழுமை பெறுகிறது என நம்புகிறேன்.

உலகம் முழுவதும் சுற்றிவருவது என்பதே எனக்கு ஒரே ஒரு ஆசையாக சொல்வேன். சுற்றுவது என்பதில் எனக்கு உள்ள வரையறை சராசரியில் இருந்து மாறுபடுவதாக அறிகிறேன். ஒரு ஊர் எனில் அதனை பொறுமையாக ஒவ்வொரு தெருவுகளையும், மக்களையும், பார்க்கவேண்டும் என எண்ணுவேன். நிறைய நடப்பது, சைக்கிள், பைக் போன்றவற்றில் மெதுவாக சுற்றி வருவதன் மூலம் அந்த ஊரின் தன்மை, கால நிலை, மக்கள் மனநிலை என்று பல்வேறு ஆராய்ச்சி மனோபாவத்தில் சுற்றி வருவதே எனக்கு ஊர் சுற்றுவது என்ற வரையறையில் வருகிறது. எனது மனோபாவதுக்குரிய ..ஊர் சுற்ற தகுந்த நண்பர்கள் எங்கேயோ இருகிறார்கள் என்று தெரிகிறது ஆனால் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை.

பஸ்ஸில்(தனித்து)பிரயாணிக்கும்  பொழுது எனது MADNESS   சில ..

பாடல்கள் போட்டால்.... அதனை அதன்  முதல் இரண்டு முதல் இரண்டு செகண்ட் களுக்குள் அது  என்ன பாட்டாக  இருக்கும் என்று யோசிப்பது ....( சக்சஸ் ரெட் 90% !)

சாலையோர BOARD களில்  உள்ள சுவராசியமான விளம்பரங்களில் உள்ள  விசயங்களை ஆராய்வது.

பக்கத்தில் போகும் பைக்குகளில் தெரியும் ஸ்பீட் மீட்டர்களில் உள்ள ஸ்பீடும் நான் யூகம்  செய்த எனது பஸ்சின் ஸ்பீடும் ஒன்றாயின்.... சந்தோசம் பட்டுகொள்வது !  :-)

இறங்கும் போது டிரைவருக்கு நன்றி சொல்வது !? ( ஒரு ஆக்சிடண்டை சந்தித்தவனாயிற்றே ....)

ஏதேனும் ஒரு விஷயம் குறித்து ஆழமாக ஆராய்ந்து கொண்டே வருவது  ...( இது எல்லோருக்கும் பொதுவென நினைக்கிறேன்)

பஸ்ஸில் உள்ளே எல்லோரும் என்ன மனநிலையில் இருப்பார்கள் ?  என்று  ஆராய்வது ( ஜோடிகளாயின்  ....அவர்களது' ஜோ'டியின் வருசங்கள் எத்தனாவது  என்று ஆராய்வது .... )

இன்னும் சில.... மொத்தத்தில் பிரயாணம் அதிகம் செய்யும் பழக்கம் எனது ஆதார  பழக்கவழக்கத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
                                                                                         ( ஜனவரி 2015)