எனது நூலகம்

புத்தகம் படிப்பதென்பது மிக சுகமான ஒரு விஷயம்..சிறு வயதில் அம்மாவுக்கு இருந்த புத்தகம் படிக்கும் வழக்கம் எனக்கும் தொற்றிகொண்டதில்  ஆச்சரியமில்லை..அண்ணன்..சொந்தங்கள் என்று பலரும் புத்தகம் படிப்பதில் மிக ஆர்வம் உடையவர்கள்..ஆகவே நானும் அப்படி...

சிறிது சிறிதாக சேர்த்த புத்தகங்களை சேர்த்து ஒழுங்கு பண்ணி வைத்து பார்த்ததில் தற்போது மிக குறைவான புத்தகங்களே எஞ்சி உள்ளன. அவைகளை தற்போது எண்கள்  இட்டு வரிசையாக வைத்துள்ளேன்...அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுக படுத்த விரும்புகிறேன்.

குறிப்பு - நான் படித்ததால் மட்டுமே அதனை பற்றிய விமர்சனம் எழுதும் ஐடியா சரியாக படவில்லை ஆகவே மற்றவர்களுக்கு படிக்க சொல்லி  ரெகமண்ட் செய்யும் அளவிற்கு உள்ள புத்தகங்களை பற்றி மட்டுமே சிறிய அளவில் விமர்சனம் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.

இதுவரையுலும் படித்த புத்தகங்களில் மிகவும் பிடித்ததாக டாப் டென்  புத்தகங்களின் வரிசை இதோ -

ஏன்? எதற்கு? எப்படி?  - சுஜாதா
டாலர் தேசம் - ப.ராகவன்
கொஞ்சம் காதல் வேண்டும் &எப்படியும் ஜெயிக்க வேண்டும் - பட்டுகோட்டை பிரபாகர் 
ராஜீவ் காந்தி கொலைவழக்கு - ரகோத்தமன் 
கற்றதும்...பெற்றதும் - சுஜாதா
வந்தார்கள் வென்றார்கள் - மதன் 
கார்ட்டூன் ஜோக்ஸ் - மதன்
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - மதன்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - சுவாமி சுகபோதானந்தா
இயர்  புக் - மலையாள மனோரமா

                                                                                                                      (ஆகஸ்ட் 2015 )