சிற்றின்பங்கள்

பெரும்பாலும் எல்லா மனிதர்களும் எதோ வகையான சிற்றின்பங்களுக்கு அடிமையானவர்களே...அவை மற்றவர்களுக்கும், சமூகத்துக்கும் எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை பொறுத்தே அதனை அவர்கள் வெளியில் சொல்வதும்...சொல்லாததும்!

சராசரி மனிதர்களாகிய நம்மை போன்றோர்களுக்கு தினமும் ஐந்து வேலை டீ  குடித்தால்தான் ஆச்சு.., என்பது முதற்கொண்டு தினமும் கொஞ்சமேனும் மது குடித்துவிட்டு தூங்குவது உட்பட எல்லாமும் ஒரு வகை  சிற்றின்பமே...

சில சினிமாக்கள் தரும் சுகம் கூட சின்றின்ப வகையே...நம்மால் முடியாததை ஹீரோ செய்யும் போது அதனை கொண்டு நாம் அடையும் இன்பம் கூட சின்றின்பமே...தனது குழந்தையே கொஞ்ச நேரமேனும் கொஞ்சினால் தான் தனக்கு அன்றைய தினமும் முழுமை பெரும் என்பதும் சிற்றின்பமே...ஆக ..சின்றின்பங்களின் வகை ஆளாளுக்கு மாறும் என்பதை உணர்த்தவே சில உதாரணங்கள் மேலே சொன்னது...அது போலவே எனக்கும் சில சிற்றின்பங்கள் இருப்பதை அறிந்தேன்....அதனை  சுய பரிசோதனை செய்யும் பொழுது அதன் வரிசை சற்று பெரிதாக தெரிந்தது...நீங்களும் சுய பரிசோதனை செய்தால் அது தெரிய வரலாம்!

இதோ எனது சிற்றின்பங்களின் ( Bliss ?!! ) லிஸ்ட்....

அதிகாலையில் யாரும் எழுந்திராத வேளையில் நாம் எழுந்து விடியலை சூடான காப்பி யோடு ரசிக்கும் போது...

குளிரான காலநிலையில் ஜாக்கிங் போகும் நேரங்கள்...

ஒரு நல்ல தேநீர் குடிக்கும்போது....

இரவு நேரத்தில் எந்த சத்தமும் இல்லாமல் மிக மென்மையான மேலோடி பாடல் கேட்கும்போது....

தொலைதூர பிரயாணம் ரயிலிலும்..சில மணிநேர பயணமும் பஸ்சிலும் செய்யும் பொழுது காணும் புற காட்சிகளும், அக பரிசோதனைகளும்...

சுவராசியமான புத்தகத்தை ஒரே மூச்சில் வாசிக்கும் போது...

ஒரு நீயா - நானா லெவலில் செஸ் விளையாடும் போது..

விறுவிறுப்பான பாட்மிண்டன் விளையாட்டின்போது வியர்க்கும் வியர்வையில்...

முகம் தெரியா  குழந்தை நாம் கைநீட்டியதும் தாவி வரும் கணம்...

யாருக்கும் தெரியாத பதிலை நாம் மட்டும் தெரிந்து சொல்லும்போது...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களை விடுவிக்கும் போது....

மேஜிக்குகள் செய்து காட்டும்போது மற்றவர்கள் அடையும்  ஆச்சர்யங்கள் காணும் போது ...

ஒரு பரபரப்பான திரில்லர் / ஆக்சன் சினிமா பார்க்கும் போது...

மற்றவர்கள் ஏதேனும் ஒரு விசயத்தில்  நம்மை உறுதியாய் நம்பும் தருணங்கள்..

புதிய ஊர்களை காணும் போது.....

முடிவெட்டும்போது தூங்கும் சிறு தூக்கம் / இரவு தூக்கத்தில் தலையை கோதினால் வரும் தூக்கம்

குழந்தைகளிடம் தெரிந்தே தோற்று போகும்போதும் ....பல்பு வாங்கும்போதும்....

திடீரென பழக்கமாகி அப்படியே விலகி போகும் திடீர் நட்புகளின் ஒத்த அலைவரிசை ....மற்றும் அந்த ஒத்த அலைவரிசை பெண் பாலினமாய் இருப்பது...

இது போன்று இன்னும் இருக்கின்றன... தோன்றும் போது  பதிவேற்றுகிறேன்.

                                                                                ( ஆகஸ்ட் 2015 )