இசையின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் (குறள் 420)
இசை என்னும் வஸ்த்து மிக முக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன். நேரம் போகுவதர்க்காக பாடல்கள் என்று இல்லாமல் அதன் சுவை உணர்ந்து கேட்கவே எப்போதும் விருப்பம்.
எனது சிறுவயதில் எனது தந்தை தனெக்கென ஒரு டேப் ரிக்கார்டர் வைத்திருந்து தனக்கு பிடித்த பாடல்களை கேட்பார்...அன்று முதலோ என்னவோ பாடல்களை ரசிப்பதில் ஒரு தனி சுகம்!
வயதுக்கு ஏற்றாற்போல் எந்த பாடல்கள் பிடிப்பது என்பதில் ஒரு உளவியல் சிக்கல் இருந்தது உண்மை! 1994 இல் எங்களது பக்கத்துக்கு ரூமில் இருந்த சாகுல்ஹமீது என்பவர் அறிமுகபடுத்தியதுதான் ஆங்கில இசை...அது வரை ஆங்கில இசையில் மைக்கேல் ஜாக்சன் னை தவிர யாரையும் தெரியாது.
காலங்கள் போக போக ஒவ்வொரு வகையாக இசையின் மற்ற வடிவங்கள் உள்ளே புக ஆரம்பித்தது. தனி இசைகோர்வைகள் , இன்ஸ்ட்டருமேண்டல் மியூசிக், கஸல் , கர்நாடக சங்கீதம், பாப், ராப், ரக்கே , ப்ளூ , ஜாஸ்,ஹிந்துஸ்தானி, ஹிந்தி மற்றும் பிற மொழி பாடல்கள் என்று எல்லா வகையும் பிடிக்க ஆரம்பித்தது...முடிந்த அளவுக்கு இசையின் நுணுக்கங்களை தெரிந்து ரசிக்க விரும்புகிறேன்.
டப்பாகுத்தோ, சாஸ்திரிய சங்கீதமோ, மேலை நாட்டு சங்கீதமோ எல்லாமும் எனக்கு பிடிக்கும்...யாரேனும் இசையின் ஆதார சுருதியான விசயங்களை கற்று தந்தால் ....அவர்களை தேடி சென்று கற்றுக்கொள்ள ஆசையுண்டு!
இசையில் என்னை மயக்கிய பாடல்கள் மற்றும் இசைகோர்வைகள் பற்றி கட்டுரைகள் பக்கத்தில் படிக்கலாம்.
(ஏப்ரல் 2015 )
(ஏப்ரல் 2015 )