சினிமாவும் நானும்


சினிமா பார்ப்பது என்பது எல்லோருக்கும் பிடித்தமானது ...சுவராசியமானது. குறிப்பிட்ட வயது வரை எனக்கும் அது போன்றே இருந்தது..ஓரளவுக்கு உலகம் பிடிபட்டதும் சினிமாவும் அதன் மொழியும் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை என்பது புரிந்தது.

சிறுவயதில் ரசித்த / பிடித்த சினிமாக்கள் ஒரு  மாதிரியான பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே பிரதானமானதாக தெரிந்தது...தற்போது அதன் நீள - அகலங்கள் மற்றும் வியாபார / அரசியல் எல்லாம் புரிய வருகிறது. தற்போது சினிமாவை அதன் பொருள் உணர்ந்து ரசிப்பதாக தெரிகிறது. ஒரு சினிமாவின் நோக்கம் என்னவெல்லாம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஓரளவுக்கு புரிகிறது.

கடந்த காலங்கள் முதற்கொண்டு இன்றைய தேதிவரை வந்த சினிமாக்களை அசை போடும் போது அதன் தன்மை..அதன் சுவை....அதன் அழகியல் எல்லாவற்றையும் பார்க்கும்போது சினிமா எனக்கு தரும் அனுபவம் வேறு மாதிரியான ஒரு அவசிய ரசனையாகவே மாறிபோயிற்று .

தலைப்பின் மீது கிளிக்கவும்

கட்டாயம் பார்க்க வேண்டிய 100 திரைப்படங்கள் 

                                                                                   (ஜூலை 2015 )