கேள்வி பதில்கள் -7


க்ளோனிங் பத்தி? என்னை போல் தோற்றமளிக்கும் அந்த க்ளோனிங் என் குணத்தையும் பெற்றிருக்குமா?
அபு ஜாமீன், பாண்டிச்சேரி

ஒரு உயிரினத்தின் முழு மரபணு கூறுகளை உபயோகித்து அதை ஒத்த இன்னொரு உயிரினத்தை உருவாக்கபடுதல் - க்ளோனிங்!!


உங்களுடைய க்ளோனிங் உங்களின் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும் ., ஆனால் குணம்?? நோ சான்ஸ் !! சச்சினின் க்ளோனிங் கிரிக்கெட் விளையாட தெரியாமல் போகலாம், என்னுடைய க்ளோனிங் இந்த அளவுக்கு வலைப்பூவில் மொக்கை போடாமல் உருப்படியாய் சாதிக்கலாம்.மாமிச
உணவு பொதுவாய் நல்லதா?
சிராஜ்
, பண்டாரவாடை, ராஜகிரி

நம் உடம்புக்கு தேவை படும் அமினோ அமிலங்கள் மாமிச உணவில் மிகுந்து காணப்படும். புரட்டீன்களால் கிடைக்கும் சத்துக்கள் குறிப்பாக சோயாபீன்ஸை தவிர மற்ற காய்கறிகளில் அதிகம் இருக்காது. பொதுவில் நமது நாட்டு சூழலுக்கு காய்கறிகள் அதிகமாக உட்கொள்வதுதான் நல்லது.கண்ணாடி எதை வைத்து தயாரிக்கிறார்கள்?
அபு ஹிஸாம், மன்னடி , சென்னை

மணல்தான்!!, சிலிக்கா என்ற வஸ்துவால் ஆனதுதான் மணல். இதனை அதிக வெப்பபடுத்தி உருக வைத்து குளிர வைக்கும் போது கிடைப்பதுதான் கண்ணாடி!

சுத்தமான சிலிக்கா மூலமாக தயாரிக்க முடிந்தாலும் அதை இன்னும் எளிதாக தயாரிக்க சிலிக்காவுடன் சுண்ணாம்பு ,சோடியம் கார்போனேட் எல்லாம் கலந்து உருவாக்குவார்கள். கண்ணாடி திடபோருளா?, திரவபொருளா? இரண்டும் இல்லை, அது உறைந்த திரவம் ( frozen liquid)பால் பொங்குவதற்கு காரணம்?
மல்லிகா, சென்னை

ரொம்ப சிம்பிள், பால் சூடாகும் போது பாலின் மேற்பரப்பில் பாலில் உள்ள கொழுப்பினால் ஒரு ஆடை உருவாகும், அந்த ஆடையை பாலின் கீழே உள்ள ஆவி மேலே கொண்டுவரும்போது , பால் மேலே பொங்குகிறது!இரு நாடுகளை பிரிக்கும் எல்லை கோடுகள் புரிகிறது., கடல் எப்படி பிரிக்கிறார்கள்?
மீரா முபீதா, காயல்பட்டணம்
கடல் ஓரத்திலிருந்து இவ்வளவு தூரம் என்று ஒரு வரையறையை "நாட்டிங்கள்" அளவில் ( ஒரு நாட்டிங்கள் என்பது 1852 மீட்டருக்கு சமம்) குறிப்பிடுவார்கள்., உதாரணத்திற்கு இந்தியாவில் கடல் எல்லையை கடற்கரி ஓரத்திலிருந்து சுமார் 12 நாட்டிங்கள் மைல் தொலைவில் உள்ளது. தோராயமாக இருபத்திரண்டு கிலோமீட்டர் என்று குறிப்பிடலாம்.

இந்த அளவு ஐ நா சபையால் நிர்மாணிக்கப்பட்டது., இந்த அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் , சோமாலிய, பேரு, காங்கோ போன்ற நாடுகள் சுமார் 200 நட்டிங்கள் சொந்தம்,. இப்ப புரியுமே சோமாலிய போடும் ஆட்டத்தின் காரணம். சிங்கப்பூர் வெறும் 3 நாட்டிங்கள் மைலுக்குதான் சொந்தம் !மின்னல்கள் பல மைல்கள் நீளத்திற்கு இருக்கும் சரி., அதன் அகலத்திற்கு அளவு கோல் ஏதும் உண்டா?
( ஹாஜா தவ்பீக், சின்ன நெசவு தெரு, காயல்பட்டணம்)மின்னல்களின் நீளம், மற்றும் அகலம் என்பது அதன் வீரியத்தை பொறுத்தது ., இவ்வளவு என்று வரையறுக்க இயலாது., நீளத்திற்கு காரணம், பூமியின் புவியீர்ப்பு விசை!

மின்சக்தியை சேமிக்க இயலாது, அப்படி சேமிக்க இயன்றால் மின்தட்டுப்பாடு என்பதே வராது! அவ்வளவு சக்தி வாய்ந்தது!!அறிவை அடிமையாக்கும்சக்தி எதற்கு உண்டு? குலசை நதீன், காயல்பட்டணம்

எல்லோருக்கும் ஏதோ ஒன்றின் மீது அதீத பிடிப்பு இருந்தே தீரும்! சிலருக்கு உறவுகள் மீது, சிலருக்கு பணம், சிலருக்கு தான் வளர்க்கும் பூனையின் மீது கூட இருக்கலாம்.

தங்களது மனசாட்சியை கழற்றி வைக்க எந்த விஷயங்கள் அவர்களை தூண்டுதோ அவை எல்லாமே அறிவை அடிமையாக்கும் விசயங்கள்தான். சமகாலத்தில் அறிவார்ந்த செயல்கள் எல்லாமே மனசாட்சியை அடகு வைக்கும் விசயமாகவே இருப்பதை கவனித்தீர்களா?எஸ்கிமோக்களை பத்தி சுவராசியமான செய்தி ஏதேனும் உண்டா?
செய்யதலி பாத்திமா , கொச்சியார் தெரு, காயல்பட்டணம்


எஸ்கிமோ என்பதன் அர்த்தம் அவர்கள் மொழியில் "இறைச்சியை பச்சையாக உண்பவர்கள் என்று அர்த்தம்". வடதுருவ பகுதிகளிலும், வடக்கு அலாஸ்கா,கனடா, மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் இவர்கள் வாழ்கிறார்கள் .இவர்கள் சற்று குள்ளமானவர்களாகவும், குட்டையான கால்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள். கோடையில் தோலால் ஆனா கூடாரங்களிலும் ,ஐஸ் கட்டிகளினால் ஆன (இக்லு) கூடாரங்களிலும் வசிப்பார்கள். உலகில் தோராயமாக சுமார் எழுபதாயிரம் எஸ்கிமோ மக்களே இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். குளிர்ந்த கடல் பகுதிகளில் வேட்டையாடி எப்படி தப்பிப்பிழைத்து வாழ்வது என்று தெரிந்து வாழ்கிறார்கள்!