இவரை உங்களுக்கு பிடிக்கும்தானே?

உங்களுக்கு வயது  முப்பது - ஐம்பது உள்ளேவா? வாங்க உங்களைத்தான் தேடிகிட்டு  இருந்தேன். பத்துவயது தாண்டியபின் நீங்கள் பார்த்து வந்த சில விஷயங்கள் எல்லாமுமே கொஞ்சம் ஞாபகம் இருக்கும்., குறிப்பா சினிமாக்கள் கண்டிப்பாக ஞாபகம் இருக்கும்., காரணம் வயது! அந்த நேரத்தில் சற்று கவனித்து ரசிக்க வைத்தவர்கள் என்ற வருசையில் மட்டும் அல்லாது எனது பிரியமான திரை பிரபலங்களில் வருசையில்  வருபவர்தான் இவர் - கே.பாக்யராஜ் !

ஆரம்பகாலத்தில் இவரின் படங்களை சும்மா ஜஸ்ட் என்றுதான் பார்த்ததாக ஞாபகம்! சற்றே விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில்தான் இவரின் "வீச்சு" புரிந்தது! எல்லா பத்திரிக்கைகளுமே இவரை ஒருமித்த கருத்தில் சொல்வது " இந்தியாவின் சிறந்த திரை கதாசிரியர்" - எவ்வளவு அழகான உண்மை!

எனக்கு நன்கு மதி தெரிந்த அளவிற்கு வளர்ந்த பின் மிக மிக கவனித்து பார்த்தபடம் " சுந்தர காண்டம் " ., அதில் வந்த பாக்யா டச் எல்லாமுமே மிக நச் தான் !

 நாகரீகமான காமெடிகள், தன்னை சற்று ஏமாளியா காட்டிகொள்ளும் அதே நேரத்தில்  அதே காட்சியின் மூலம் தான் புத்திசாலி என்றும் புரியவைப்பார்! சூழ்நிலைகளை வில்லன்களாக்குபவர்! கதையின் ஓட்டத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்பது போல் சொல்லி, தீர்வை எப்படி சொல்லப்போறாரோ என்று சுவராசிபடுத்துபவர்!

பிரச்சனையின் தீர்வுகளை பாக்கெட்டில் வைத்துகொண்டு , அதன் பின் அந்த பிரச்சனைகளை மிக அழகான  சிக்கல்களை உருவாக்கி ., ஒவ்வொன்றாக அம்முடிச்சுகளை அவிழ்ப்பார்! 

கொஞ்சம் விவகாரமான இந்த மாதிரியான சீனை பாக்கியராஜ் என்பதால்தானோ என்னவோ சிரிக்க மட்டும் முடிகிறது!

முடிந்த அளவிற்கு பாலியல் விசயங்களை நாசூக்காக சொல்லி சிரிக்க வைப்பார். குடும்பத்துடன் உடகார்ந்து படம் பார்க்கலாம் என்ற பதத்தை சில காட்சிகளில் நொறுக்கி விடுவாரோ என்ற பயம் வரும், ஆனால் கடைசியில் அவைகளின் முடிவு சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கும்! ( இந்த விசயத்தில் இவரை இது வரையுளும் யாரும் மிஞ்சியது கிடையாது!)

கதாநாயகி கேரக்டருக்கு மிக முக்கியத்துவம் குடுத்து , ஆனாலும் தன்னுடைய கேரக்டருக்கு அதே முக்கியத்துவத்தை கெட்டிகாரத்தனமாக காப்பாற்றிகொள்வார்!.

டைரக்டர் விசுவுக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு., இருவரும் தங்களது படங்களில் தாங்களே "ஆளவேண்டும்" என்ற மாதிரியான காட்சியமைப்புகள் அதிகம் இருக்கும், ஆனால் பாக்யராஜ் இதில் நேரிடையாக தனது ' முனைப்பை ' காட்டாமல் , பார்வையாளர்களாலலேயே  தான் அங்கே இருந்தால்தான் சரியாக இருக்கும் என்பது போல் காட்சி அமைப்புகளை வைத்திருப்பார்.

வேப்பங்காயை வெள்ளத்திற்குள் வைத்து கொடுப்பது - என்ற கிராமிய பழமொழி இவருக்கு நன்கு பொருந்தும்! எவ்வளவு சிக்கலான விசயத்தையும் நிதானமாக விளக்கும் போது காத்து கொடுத்து கேட்க தூண்டும்!

இவரது பாக்யா வார இதழில் கேள்வி பதில்கள் பகுதியை படிக்கவே வாரம் வாரம் காத்திருந்த நாட்கள் உண்டு! அடியேன் நடத்திய கையெழுத்து (1992-94 -  களில்  ., "ரோஜா" மற்றும் "குழந்தை" என்று இரு பெயர்களில் நடத்திவந்தேன் ., 1.50 பைசா ) வார இதழில் அவற்றின்  பாதிப்பால் நண்பர்களை கேள்வி கேட்கவைத்து கதையாக பதில் சொல்லிய காலம் இனிமையான காலம்!

பாக்கியராஜின் படங்களில் தூறல் நின்னு போச்சுக்கு அப்புறம் வந்த அனைத்தையும் பார்த்துவிட்டேன்., அந்த வகையில் எனக்கு பிடித்த டாப் ஐந்து படங்கள்  படங்கள்!

மௌன கீதங்கள்

அந்த ஏழு நாட்கள்


முந்தானை முடிச்சு


சுந்தர காண்டம்


வீட்டுல விசேசங்க 
  
                                                                                                                         ( ஆகஸ்ட் 2011)