சுஜாதா ஸ்டைலில் எனது சிறுகதை ஒன்று

"எனக்கெனவோ சுஜாதா சொன்னது தப்போன்னு தோணுது"

"எது ?"

"அவரது எதிர்கால யூகங்கள், நாஸ்டர்டாம் சொன்னது மாதிரி ..."

"எத சொல்றே..'?"

"எல்லா ஒழுங்கற்ற ஒழுங்குகளிலும் ஒரு ஒழுங்கு இருந்தே தீரும் என்பது .."

"இது அவர் சொன்னதில்லையே ,வேற ஒரு அறிவியல் ஆய்வாலரோட கருத்துலோ "

"எனக்கு சொன்னது அவர்தானே அது சரி., சரி  என்னோட பிரச்னைக்கு உங்ககிட்ட  தீர்வு இருக்கா?"

"சொல்லு ட்ரை பண்ணறேன்"

"எங்க வீட்டுக்கு அது இஷ்டத்துக்கு வந்துட்டு போற கரண்டு எந்த டைமிங்களில்  வருது என்பத அந்த கோட்பாடு கொண்டு கண்டுபிடிக்க முடியுமா"?

"ஏன்...... கண்டு பிடிக்கலாமே..?!"

"எப்படி?"

"உங்கவீட்டுக்கு கரண்டு வர்ற நேரத்த ஒரு பேப்பர்ல எழுது., கடந்த ஒரு வார லிஸ்ட்டு வேணும்.,"""

"ஓகே, இந்தாங்க  "

"ம்.. குட் ஒரு ஐந்து நிமிஷம் பொறு .."

"பொறுக்குறேன் "
.
.
.
இந்தா..

"அட ., இது போல திட்டமிட்டா  நானும் ஓரளவுக்கு கரண்டு வர்ற நேரத்த கண்டுபிடிசிடலாமா?"

"கண்டிப்பா...."

ஒரு வாரம் கழித்து அவரிடம் .....

"சார்..."

"வாப்பா தம்பி  எப்படி என்னோட வொர்க்...  வொர்க் அவுட் ஆச்சா?"

"போங்க சார் , நீங்களும் உங்க கணிப்பும். ஒரு நாள் கூட வொர்கவுட் ஆகலே.",

"அடடே ...ஸாரிப்பா .. அப்ப சுஜாதா சொன்ன அந்த கூற்று  சரிப்பட்டுவராது போல"

"இல்லே சார், உங்களுக்கு மட்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கே,"

"எத சொல்றே?"

"நீங்க சொல்ற டைம்லதான் எல்லா வேலையையும் திட்டமிட்டு முடிச்சிடுறதா உங்க மனைவி என்  அம்மா  கிட்ட சொன்னாங்களாமே..."

"ஒஹ்  அதுவா., அத மாதிரி நீயும் கண்டுபிடிக்க எலக்ட்ரிகள்  இன்ஜினியரிங் படிச்சிருக்கணும் "

"கண்டிப்பா படிக்கிறேன் சார்..."

"அப்படியே இன்னொன்னும் கண்டிப்பா நீ செய்யனும்"

"என்ன பண்ணனும் சார் சொல்லுங்க பண்ணிடுறேன்"

"என்ன மாதிரியே  ஈபியில வேலை பார்க்கணும் "

                                                                                                                              (ஜனவரி 2012 )