பறக்கவிட்ட பட்டம்

நரேந்திர மோடியின்  இந்த அரசியல்?! தந்திரம்......  நாமும்.,  இஸ்லாமியர்களும் காப்பி அடிக்க வேண்டிய விசயங்களே... ஆனால் இது அவரால் பிரபல படுத்திய நிகழ்ச்சி என்று விட்டுவிடுவார்களோ என்றுதான் பயமாக இருக்கிறது. அது என்ன என்பதை கடைசியில் சொல்கிறேன் ....


எங்களது தென்மாவட்டங்களில் 1980-1990 களில்   மார்கழி மாத இறுதி முதல்.,  தை மாத முதல்  இரண்டு வாரம் வரை இது போன்ற பட்டங்கள் பறக்க விடுவார்கள். ஒரு அடிமுதல்  பத்து அடி வரை கூட பட்டங்களின் உயரங்கள் இருக்கும். ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டி நடைபெற்று வந்தது . அழகு, அதன் பிரமாண்டம், வடிவம், இழுப்பின் வேகம் என்று வகைக்கு ஒரு விருது கொடுப்பார்கள். பண பரிசும் உண்டு . 


எண்பதுகளில் பிறந்த அநேகருக்கு பட்டங்கள் செய்ய தெரியும். ஆனால் தற்போது அந்த கலை / விளையாட்டு  ஏதோ  ஒன்று இரண்டு பேர்களால் மட்டுமே இன்றும் பறக்க விட்டு கடைபிடிக்க படுகிறது.

கடந்த கரிநாள் அன்று  விழுப்புரம் அருகே உள்ளே வீடூர்  டாமின் அருகில் பறக்க விட்ட பட்டத்தின் வீடியோ இது ...........
எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. குஜராத்தில் வருடா வருடம் நடக்கும் உலகளாவிய பட்டம் பறக்க விடும் போட்டியை போன்று ஒன்று சென்னையில் நடத்தலாமே? காற்று  அடிக்கும் திசையை துல்லியமாக கணிக்க முடியும் இன்றைய நாளில்  கடல் நோக்கி காற்றும் அடிக்கும் ஒரு பொங்கல் நாளில் ., சென்னையில் பட்டம் பறக்க விடும் போட்டி போன்று ஒன்று நடத்தலாம். யாரேனும் முன்வருவார்களா?
                                                                                                              ( ஜனவரி 2014)