பிரச்சனைகளை தீர்ப்பது மிக எளிது

பிரச்சனைகளை தீர்ப்பது மிக எளிது....அதற்கென்று இருக்குற வழிகள் பல...எனக்கு  தெரிந்த வழிகள் சில... அதில் கொஞ்சம் இங்கே...

முதலில் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் யாருக்கு லாபம் என்று பார்க்காதீர்கள். நாம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளும் நமக்கு நேரிடையாகவோ.. மறைமுகமாகவோ மன அமைதியை தரக்கூடியதாக தான் இருக்கும் ஆக  முதலில் பிரச்சனையை எதிர்நோக்க தயாராக வேண்டும். அதுவே முதற்படி ...

ஒரு பிரச்சனையின் சாராம்சம் என்னவென்று பார்ப்பது அதன் அடுத்த கட்டம். காரணம் பிரச்சனையின் ஆணிவேர் என்ன....இதில் ஒளிந்திருப்பதென்ன...போன்ற  விடயங்கள் மிக முக்கியம்...

அந்த ராஜா நாட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார்...ஒரு பெட்டியை கணித முறையில் திறப்பதான போட்டி அது. நாட்டில் உள்ள எல்லோரும் தங்களுக்கு தெரிந்த கணித அறிவை கொண்டு  திறக்க முயற்சித்தனர்...ஆனால் ஒருவராலும் முடியவில்லை. கடைசியில் மன்னரே அதன் தீர்வை சொன்னார்." நான் அதனை பூட்டவே இல்லை., சாதாரணமாக நீங்கள் திறக்க முயற்சி செய்திருந்தாலே அது திறந்திருக்கும்"

சொல்ல வரும் விஷயம்..இதுதான் - நமக்கு வரும் எந்த பிரச்சனையையும் முதலில் சற்று தள்ளி நின்று பாருங்கள் ...சற்று நிதானமாக அதன் முடிச்சை ஆராயுங்கள்...சற்றே ஒரு ஐடியா கிடைக்கும். பின்பு களத்தில் இறங்குங்கள்.

உங்கள் எதிராளியை பேச விட்டு கேளுங்கள்...பின்பு அதனை ஆராயுங்கள் ஒரு மாதிரியான தீர்வு தெரியவரும். விட்டு கொடுக்காமல் ஒரு பிரச்சனையின் லாபங்களை நீங்களே முழுவதும் பெற நினைக்காதீர்கள். உங்கள் மேற்கோளில் எங்கும் எதிராளியே பிரச்சனைக்கு காரணமென்பது போல் பேசாதீர்கள் ( அவர்களே காரணமாக  இருந்தாலும்  ) அந்த பிரச்னை தீர்ந்தால் கிடைக்க கூடிய லாபங்களை அவர்களுக்கும் / உங்கள் மனதுக்கும் தெரிய படுத்துங்கள்.

பிரச்சனையை விட எதிராளியான அவர்/அவள் உங்களுக்கு முக்கியம் என்பது போல் பேசுங்கள். வியாபாரத்தில் வரும்  வாக்குவாதத்தில் பெரும்பாலும் எந்த கடைக்காரரும்  / ஓனரும் தங்கள் வாடிக்கையாளரை திட்டுவதில் ஒரு பாலன்ஸ் செய்வார்கள் ..வாடிக்கையாளரும் முக்கியம்..தனது கருத்தும் முக்கியம் என்பது என்பது போன்று !!

உங்களது பிரச்சனைக்கு நீங்கள் நம்பும் ஒருவர் தரும் அறிவுரை / தீர்வு ஏற்புடையதுதான்.,அதே நேரம் இதனையும் உங்கள் ஞாபகத்தில் கொள்ளுங்கள் " அவர் தரும் அறிவுரை / தீர்வு அவரது பார்வையில் இருந்து உங்களுக்காக வருகிறது. அந்த பதிலில் அவரது அனுபவம், உங்கள் மீதான அக்கறை, அவர் இது போன்ற விசயத்தில் எடுத்த முடிவின் சாதக/பாதங்கள், உங்கள் எதிராளி மீதான கோபம் அல்லது அக்கறை, இதன் மூலம் அவருக்கு இருக்கின்ற லாப /நட்டங்கள்,இன்னும் இது போன்ற பல கூடியே அந்த பதில் இருக்கும்.

பொதுவாக எந்த பிரச்சனையும் தீர்க்க கூடியதே...அதனை நாம் கையாளும் விதத்தில் கொஞ்சம் விட்டுகொடுத்தல் - கொஞ்சம் டிப்லோமடிக் இருந்தாலே போதும் தீர்த்துவிடலாம்.... ஆளை அல்ல, பிரச்சனையை! 

                                                                   ( ஏப்ரல் 2015 )