ராஜா என்னும் போதை.....


எனக்கென்று இருக்கும் எல்லா வகையான ரசனையிலும் இசையே எனது முதல் ரசனை என்பேன். இசையின் எல்லா வடிவங்களும் பிடிக்கும். நான் பிறந்து வளர்ந்து கேட்டது எல்லாம் தமிழ் இசையே அதிலும் திரை இசையே என்பதால் அதனை அதிகம் கேட்டதுண்டு. இருபதுகளை கடந்த பின்தான் மற்ற இசை வடிவங்கள் அதிகம் கண்டுகொண்டதுண்டு.

இசை என்றால் எனது ஒரே ஒரு விருப்பம்தான் இருப்பின்... அது ராஜாவே! முப்பதுகளை கடந்த எல்லோருக்கும் ராஜாவே பிடித்தமானவர் என்ற உளவியல் கூற்றினையும் தாண்டி அவரது இசை எனது ஆன்மாவை தொட்டதே இது குறித்து எழுத காரணம்.

பெரும்பாலும் மேலோடி வகைதான் நம்மை அதிகம் தாலாட்டும் என்ற பொது காரணியில் எனது ரசனையும் அடங்கும்.உருக உருக கேட்ட பாடல்களை அதிகம் தந்தது ( எனக்கு ) ராஜாவே....ஒவ்வொரு பாடலின் இடையே வரும் இசை கோர்வைகளை அதிகம் உற்று கவனிக்கும் போதுதான் ராஜாவின் ராஜாங்கம் புரிய ..ஆரம்பித்தது.

இந்த பாடலின் ஆரம்ப இசையே அதன் ( பாடலின் ) மொத்த விசயத்தையும் சொல்லிவிடும்!எப்போதும் கேட்டாலும் உருக வைக்கும் சரணம் இந்த பாடலில்.....ஹே ராம் படத்தின் மூலம் எனக்கு கிடைத்த பொக்கிஷ  இசை கோர்வை!


ராஜாவின் இசை குறித்தோ...அதன் நுணுக்கங்கள் குறித்தோ ஆராயும் அளவுக்கு எனக்கு இசை அறிவு கிடையாது ...ஆனால் என்னுடைய சந்தோசங்களை அதிகபடுத்தவும்....சோகங்களை குறைக்கவும்..வெறுமையான நேரங்களை மகிழ்வானதாக ஆக்கவும்..எல்லா வகையான தருணங்களிலும் தேவை ராஜா!

மைக்கேல் ஜாக்சனின் இசை ஆல்பங்களில் அவரது நிகழ்ச்சியை காணும் அவரது ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விடுவார்கள்...எனக்கு நிகழ்ச்சி எல்லாம் தேவை இல்லை...உன்னை பார்த்தாலே அழுதுவிடுவேன். You கிரேட் ராஜா!
                                                                       
                                                                                    - அக்டோபர்  2015