கேள்வி பதில்கள் -7


க்ளோனிங் பத்தி? என்னை போல் தோற்றமளிக்கும் அந்த க்ளோனிங் என் குணத்தையும் பெற்றிருக்குமா?
அபு ஜாமீன், பாண்டிச்சேரி

ஒரு உயிரினத்தின் முழு மரபணு கூறுகளை உபயோகித்து அதை ஒத்த இன்னொரு உயிரினத்தை உருவாக்கபடுதல் - க்ளோனிங்!!


உங்களுடைய க்ளோனிங் உங்களின் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும் ., ஆனால் குணம்?? நோ சான்ஸ் !! சச்சினின் க்ளோனிங் கிரிக்கெட் விளையாட தெரியாமல் போகலாம், என்னுடைய க்ளோனிங் இந்த அளவுக்கு வலைப்பூவில் மொக்கை போடாமல் உருப்படியாய் சாதிக்கலாம்.



மாமிச
உணவு பொதுவாய் நல்லதா?
சிராஜ்
, பண்டாரவாடை, ராஜகிரி

நம் உடம்புக்கு தேவை படும் அமினோ அமிலங்கள் மாமிச உணவில் மிகுந்து காணப்படும். புரட்டீன்களால் கிடைக்கும் சத்துக்கள் குறிப்பாக சோயாபீன்ஸை தவிர மற்ற காய்கறிகளில் அதிகம் இருக்காது. பொதுவில் நமது நாட்டு சூழலுக்கு காய்கறிகள் அதிகமாக உட்கொள்வதுதான் நல்லது.



கண்ணாடி எதை வைத்து தயாரிக்கிறார்கள்?
அபு ஹிஸாம், மன்னடி , சென்னை

மணல்தான்!!, சிலிக்கா என்ற வஸ்துவால் ஆனதுதான் மணல். இதனை அதிக வெப்பபடுத்தி உருக வைத்து குளிர வைக்கும் போது கிடைப்பதுதான் கண்ணாடி!

சுத்தமான சிலிக்கா மூலமாக தயாரிக்க முடிந்தாலும் அதை இன்னும் எளிதாக தயாரிக்க சிலிக்காவுடன் சுண்ணாம்பு ,சோடியம் கார்போனேட் எல்லாம் கலந்து உருவாக்குவார்கள். கண்ணாடி திடபோருளா?, திரவபொருளா? இரண்டும் இல்லை, அது உறைந்த திரவம் ( frozen liquid)



பால் பொங்குவதற்கு காரணம்?
மல்லிகா, சென்னை

ரொம்ப சிம்பிள், பால் சூடாகும் போது பாலின் மேற்பரப்பில் பாலில் உள்ள கொழுப்பினால் ஒரு ஆடை உருவாகும், அந்த ஆடையை பாலின் கீழே உள்ள ஆவி மேலே கொண்டுவரும்போது , பால் மேலே பொங்குகிறது!



இரு நாடுகளை பிரிக்கும் எல்லை கோடுகள் புரிகிறது., கடல் எப்படி பிரிக்கிறார்கள்?
மீரா முபீதா, காயல்பட்டணம்
கடல் ஓரத்திலிருந்து இவ்வளவு தூரம் என்று ஒரு வரையறையை "நாட்டிங்கள்" அளவில் ( ஒரு நாட்டிங்கள் என்பது 1852 மீட்டருக்கு சமம்) குறிப்பிடுவார்கள்., உதாரணத்திற்கு இந்தியாவில் கடல் எல்லையை கடற்கரி ஓரத்திலிருந்து சுமார் 12 நாட்டிங்கள் மைல் தொலைவில் உள்ளது. தோராயமாக இருபத்திரண்டு கிலோமீட்டர் என்று குறிப்பிடலாம்.

இந்த அளவு ஐ நா சபையால் நிர்மாணிக்கப்பட்டது., இந்த அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் , சோமாலிய, பேரு, காங்கோ போன்ற நாடுகள் சுமார் 200 நட்டிங்கள் சொந்தம்,. இப்ப புரியுமே சோமாலிய போடும் ஆட்டத்தின் காரணம். சிங்கப்பூர் வெறும் 3 நாட்டிங்கள் மைலுக்குதான் சொந்தம் !



மின்னல்கள் பல மைல்கள் நீளத்திற்கு இருக்கும் சரி., அதன் அகலத்திற்கு அளவு கோல் ஏதும் உண்டா?
( ஹாஜா தவ்பீக், சின்ன நெசவு தெரு, காயல்பட்டணம்)



மின்னல்களின் நீளம், மற்றும் அகலம் என்பது அதன் வீரியத்தை பொறுத்தது ., இவ்வளவு என்று வரையறுக்க இயலாது., நீளத்திற்கு காரணம், பூமியின் புவியீர்ப்பு விசை!

மின்சக்தியை சேமிக்க இயலாது, அப்படி சேமிக்க இயன்றால் மின்தட்டுப்பாடு என்பதே வராது! அவ்வளவு சக்தி வாய்ந்தது!!



அறிவை அடிமையாக்கும்சக்தி எதற்கு உண்டு? குலசை நதீன், காயல்பட்டணம்

எல்லோருக்கும் ஏதோ ஒன்றின் மீது அதீத பிடிப்பு இருந்தே தீரும்! சிலருக்கு உறவுகள் மீது, சிலருக்கு பணம், சிலருக்கு தான் வளர்க்கும் பூனையின் மீது கூட இருக்கலாம்.

தங்களது மனசாட்சியை கழற்றி வைக்க எந்த விஷயங்கள் அவர்களை தூண்டுதோ அவை எல்லாமே அறிவை அடிமையாக்கும் விசயங்கள்தான். சமகாலத்தில் அறிவார்ந்த செயல்கள் எல்லாமே மனசாட்சியை அடகு வைக்கும் விசயமாகவே இருப்பதை கவனித்தீர்களா?



எஸ்கிமோக்களை பத்தி சுவராசியமான செய்தி ஏதேனும் உண்டா?
செய்யதலி பாத்திமா , கொச்சியார் தெரு, காயல்பட்டணம்


எஸ்கிமோ என்பதன் அர்த்தம் அவர்கள் மொழியில் "இறைச்சியை பச்சையாக உண்பவர்கள் என்று அர்த்தம்". வடதுருவ பகுதிகளிலும், வடக்கு அலாஸ்கா,கனடா, மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் இவர்கள் வாழ்கிறார்கள் .



இவர்கள் சற்று குள்ளமானவர்களாகவும், குட்டையான கால்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள். கோடையில் தோலால் ஆனா கூடாரங்களிலும் ,ஐஸ் கட்டிகளினால் ஆன (இக்லு) கூடாரங்களிலும் வசிப்பார்கள். உலகில் தோராயமாக சுமார் எழுபதாயிரம் எஸ்கிமோ மக்களே இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். குளிர்ந்த கடல் பகுதிகளில் வேட்டையாடி எப்படி தப்பிப்பிழைத்து வாழ்வது என்று தெரிந்து வாழ்கிறார்கள்!

கேள்வி பதில்கள் - 6

நைட்டோபோபியா பற்றி சொல்லுங்களேன் ?
அகமது ரஜீனா, காட்டு தைக்கா தெரு, காயல்பட்டணம்,

நைட்டோ போபியா என்பது வஞ்சனையில்லாமல் இருட்டை பார்த்து பயப்படுவது. பொதுவாக நாம் எல்லோருமே இரவை பார்த்து பயப்படுவது உண்டு. அதற்கான பொதுவான காரணம் இருட்டில் நமக்கு எதுவும் புலப்படாது என்பதுதான்.


இந்த போபியாவை பொறுத்தமட்டில் இந்த போபியாகாரர்கள் வெட்கப்பட வேண்டியது என்று ஒன்றும் கிடையாது. கிராமங்களில் இருப்பவர்களை விட நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்த போபியா அதிகம் இல்லை. காரணம் - பகல் போல் வெளிச்சத்தில் நகரங்கள் அதிகமாக இருப்பதுதான்.

பொதுவாக 2 வயது குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு அதிகம். நாம் வேறு அவர்களை பயமுறுத்தும் பொழுது இருட்டை கண்டால் பயப்படனும் என்பது போல் சொல்லி வைக்கிறோம். இதுவும் தப்பு. குழந்தையுண்டான பெண்களுக்கு இந்த போபியா அதிகம் இருந்தால் அது குழந்தைக்கும் சிறிது பாதிப்பு வர வாய்ப்புண்டு. அது சரி.... AEROPHOBIA என்ன தெரியுமா? கரெக்ட்... அதுதான். விமான பயணம் பற்றிய பயம்.




“இமயமலையின் பயன்தான் என்ன?”
(நிஜாமுதீன், CMP லேன், அதிராம்பட்டிணம்)


மலையின் பயன்கள் காலத்தால் மாறுபடுகிறது. அன்னியர்கள் இமயமலையை தாண்டி நம் நாட்டின் மீது படையெடுக்கமுடியாது என்று பள்ளிக் கூட பாடத்தில் படித்தது ஞாபகம். ஆனால் நவீன ஆயுதங்கள் விமானங்கள் எல்லாம் வந்த பிறகு அந்த காரணம் காணாமல் போய்விட்டது.

மலை என்பது பூமி தட்டு நகரும் பொழுது, இடநெருக்கடி ஏற்பட்டு அதனால் பூமிபந்தின் மேல் முளைத்த நிலபரப்பே மலையாகியது என்பது அறிவியல் கோட்பாடு. அது மட்டுமின்றி இமயமலையின் உயரமும் கூடிக்கொண்டே போவதை அளந்து காட்டிவிருக்கிறார்கள். இமயமலையின் பயன் என்று சொல்ல வேண்டுமென்றால் அதன்மேல் படிந்திருக்கும் பனிக்கட்டிகள் வெயில் காலத்தில் உருகி இந்தியாவில் வற்றாத ஜீவநதியாகிய கங்கைக்கு உதவுகிறது. இது போல இன்னும் பல நதிகளின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது.

கொசுறு தகவல் : மலைகள் நிரம்பிய பகுதிகளில் பூகம்பம் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


பிரசர் குக்கரில் சமைத்து சாப்பிடுவதால் உடம்புக்கு ஏதும் தீமையா?
அபு முஜாஜித் - அலியார் தெரு - காயல்பட்டணம்


பிரஷர் குக்கரில் உஷ்ணமும், விரயமாகாமல் இருப்பதால் சமையல் உடனே முடிந்து விடுகிறது. மற்றபடி அதனால் எந்த கெடுதியும் விளைவதாக நிரூபிக்கப்படவில்லை. பிரஷர் குக்கர்கள் வருவதற்கு முன் “ருக்குமணி குக்கர்” என்று ஓன்று இருந்ததாம். அதற்கும் இதே முறைதான் பயன்படுத்தப்பட்டது.



விண்வெளி வீரர்கள் இயற்கை உபாதைகளுக்கு என்ன செய்வார்கள்?
(ஹாஜா தவ்பீக், சின்ன நெசவு தெரு, காயல்பட்டணம்)




விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் எல்லாமே தலைகீழ்தான். தூங்க வேண்டும் என்றால் ஒரு படுக்கையோடு தங்களை பெல்ட் வைத்து கட்டிக் கொள்வார்கள் கை கழுவ வேண்டும் என்றாலும் துணி வைத்து துடைத்து தான் கழுவ (?!) வேண்டும். நீங்கள் கேட்ட நம்பர் 2 விஷயம், பிளைட்டில் உள்ளதுபோல் தான் இருக்கும் , தண்ணீர் உபயோகிக்க முடியாது. எல்லாம் “வேக்கும் மெதட்” தான். உறிஞ்சிக் கொள்ளும் சிறுநீர் கழிப்பார்கள், உறிஞ்சிக் கொள்ளும்.

நாம் தின்பதுபோல் இட்லி, தோசை, பர்க்கர், பிரட் என்று திங்கமாட்டார்கள். அவர்களின் உணவுகள் மாத்திரை வடிவில் இருக்கும். பசியை மறக்க செய்யும் வஸ்து அது. அதே நேரம் மனிதனுக்கு தேவையான அடிப்படை சக்திகளும் அந்த மாத்திரை வடிவ உணவில் உண்டு. ஒரு வேளை உணவாக அவர்கள் அருந்தும் அந்த மாத்திரையின் விலை சில ஆயிரங்களில் வரும். பயிற்சிகள் பெற்றபின் இதெல்லாம் சாத்தியமாகிறது.



கலப்பு மணம் செய்து கொள்கிறார்களோ, இதைப் பற்றி கருத்து ....?
குலசை நஜ்முதீன், சிவன் கோயில் தெரு, காயல்பட்டணம்)


“ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் தான் அது கலப்பு பணம். ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வது கலப்பு மணம் என்று ஒன்று கிடையவே கிடையாது”.
இதே கேள்வியை பெரியாரிடம் கேட்ட போது சொன்ன பதில் தான் மேலே உள்ளது.


சாதிகள் என்ற அமைப்பே இல்லாத போது கலப்பு மனம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்த கேள்விக்கு பதில் சொல்லி சாதி என்ற பிரிவுகள் உள்ளதாக மறைமுகமாக கூட ஏற்றுக் கொள்ள முடியாது.


சுமார் இருநூறு கோடி பேரில் ஒருவருக்குதான் 120 வயதுக்கு மேல் வாழும் வாய்ப்பு இருக்கிறது. என்கிறார்களே அது உண்மையா?
ஹாஜா தவ்பீக், சின்ன நெசவு தெரு, காயல் பட்டணம்.


இந்த விகிதாசாரங்கள் எல்லாம் மொத்த மக்கள் தொகையில் இருந்து பார்த்து கழித்து ஒரு முடிவுக்கு வருவது. பொதுவாக உலக மக்கள் தொகை 700 கோடி என்றால், 110 வயதுக்கு மேல் 3 பேர்கள் இருக்கலாம், அப்பொழுது, விகிதாச்சாரம் 3/1=233 கோடி. ஆக 233 கோடி பேருக்கு ஒருத்தர் 110 வயதுக்கு மேல். இந்த மாதிரியான தகவல்கள் எல்லாம் நம்மை சற்று சுவராசியப்படுத்துவதற்காக வெளிவருகிறது.

உமர் (ரலி) அவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக படித்தேன். அது எந்த காரணத்திற்காக என்று சொல்ல முடியுமா?
(மீரா முபீதா, L.F. ரோடு, காயல்பட்டணம்)


அது உலக சாதனை புத்தகம் இல்லை. மைக்கேல் H. ஹார்ட் என்பவர். உலகில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியவர் என்ற வகையில் சரித்திரத்தில் இடம் பெற்றவர்களிலிருந்து தேர்ந்தெடுத்து THE 100 என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த புத்தகத்தில் முகமது நபி (ஸல்) முதலிடத்திலும், சர் ஐசக் நியூட்டன் இரண்டாமிடத்திலும், இயேசு நாதரை மூன்றாம் இடத்திலும் இடம் பெற செய்தார். அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்ட இஸ்லாமியர்களின் இரண்டாம் கலீபா (மத தலைவர்) என்றழைக்கப்படும் உமர் (ரலி) அவர்கள் 52 இடத்தில் இடம் பெற்றுள்ளார்.



நமது நாட்டில் பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறதே... இதற்கெல்லாம் மூலக்காரணம்?
- குலசை நதீன், சிவன் கோயில் தெரு, காயல்பட்டிணம்.


பாலியல் கல்வி அவசியம் என்பதன் அவசியத்தை கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். இருபது வருடங்களுக்கு முன் வாழ்ந்த சூழல் வேறு, தற்போதைய கால சூழல் வேறு. இன்றைய சூழலுக்கு பாலியல் கல்வி மிக அவசியம். எந்தெந்த வயதினருக்கு எந்தெந்த வகையிலான பாலியல் குறித்த கல்வியை அளிப்பது என்பதுபற்றி நிபுணர்கள் முடிவு செய்யலாம். கல்யாணம் முடிந்த பல பேர்களுக்கு பாலியல் குறித்த சந்தேகங்கள் அதிகம், யாரிடம் கேட்பது என்ற கூச்சமும், தயக்கமும் அவர்களை கடைசி வரையிலும் சந்தேகங்களோடு வாழவைக்கிறது.

ஊடகங்களின் அபரிதமான வளர்ச்சியும், அடிப்படை கலாச்சார மாற்றங்களும் பாலியல் குறித்த பார்வையை மாற்றியிருக்கிறது. அப்படி பாலியல் கல்வி தேவையில்லை என்பவர்களுக்கு ஒரு கேள்வி... 1980களில் உங்களை சுற்றியிருந்த பாலியல் குறித்த சூழ்நிலைகளை நன்கு யோசித்துபாருங்கள். தற்போதைய சூழலை சிந்தித்து பாருங்கள்...? கண்களாலேயே காமப்பார்வை பேசிய காலத்தையும், நமீதாவின் “திறந்த” உள்ளத்தையும் யோசியுங்கள். ஒன்று 1980களின் சூழலை கொண்டு வாருங்கள்.இல்லையெனில் பாலியல் கல்வியை முறைப்படுத்தி கற்க வாருங்கள்.,



மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், சுதந்திர இந்தியா என்று எப்படி பெருமையடிப்பது?
- செய்யது அகமது, மொகுதூம், தெரு, காயல்பட்டணம்..


நமது அண்டை மாநிலமான கர்நாடகம் தண்ணீர் பிரச்சனையில் காட்டும் தீவிரம்தான் நம்மில் பலருக்கு தெரியும். அதன் தீர்ப்புகளையும், அதில் உள்ள அரசியலையும் பற்றி சொல்லி சொல்லி அலுத்து போய்விட்டது. 1969ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மட்டும் இப்போதைக்கு...

அண்ணா முதலமைச்சராக இருந்த போது அமெரிக்காவிற்கு அரசியல் பயணம் செய்தார். அப்படியே ஐரோப்பா சென்ற அவர் அப்போதைய போப் ஆண்டவரை பார்த்து வரலாம் என்று சென்றிருந்தார். போப்பாண்டவரை பார்க்கும் முக்கிய புள்ளிகள் அவரிடம் வரம் ஒன்று கேட்பார்கள். ‘போப்’பும் அதை செய்து கொடுப்பார். அவரால் நிறைவேற்ற முடிகின்ற காரியங்களையே பொதுவாக கேட்பார்கள். அதே போல் அண்ணாவுக்கு ஒரு வாய்ப்பு அந்த சந்திப்பின் போது கிடைத்தது. அப்பொழுது அண்ணா போப்பிடம் போப் அவர்களே, எங்களது நாட்டின் ஒருமைப்பட்ட இந்தியா உருவாக்க பாடுபட்ட “ரானடே” அவர்களை போர்ச்சுக்கீசிய அரசு கடந்த 14 வருடங்களாக சிறையில் வைத்திருக்கிறது. எங்கள் நாட்டு அரசால் அந்த நாட்டிலிருந்து அரசியல் ரீதியாக காப்பாற்றமுடியவில்லை. சுத்தமான வீரரான ‘ரானடே’ அவர்களை நீங்கள் என் நாட்டுக்கு மீட்டி தந்தால் மகிழ்வேன்” என்றாராம். தனக்காக என்று கேட்காமல், கோவாவின் முன்னேற்றத்திற்காக போராடி அதனால் போர்ச்சுக்கல் நாட்டு (1950களில் கோவா போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது) சிறையில் வாடுபவரை மீட்க நினைத்த அண்ணா எந்த மாநிலத்தையும் பிரித்து பார்க்கவில்லை. அப்போதைய அரசியல் அப்படி!

விடுதலை பெற்ற அந்த கோவா மாநில சுதந்திர பேராட்ட வீரர் ரானடே போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுவிக்கப்பட்டார். இந்தியா வந்தவர் அண்ணாவை சந்தித்து நன்றி சொல்ல வந்தார். ஆனால் அண்ணா அவர் தமிழகம் வருவதற்குள் இறந்துவிட்டார்.

 

கேள்வி பதில்கள் - 5


கப்பல், விமானம், போன்றவற்றில் பயணம் செய்யும் பொழுது சில பேருக்கு மட்டும் வாந்தி வருகிறதே ஏன்?
(முகம்மது-சென்னை-108)

பயணத்தின் போது ஆடும் ஆட்டத்தினால் காதுகளுக்கு இருக்கும் பேலன்ஸ் மெக்கானிசம் தடைப்பட்டு, ஓரு வித குழப்பத்தில் வெளிவருவதுதான் தலை சுற்றல், மற்றும் வாந்தி.

அந்தமெக்கானிசம் இதுதான் - நம் காதுகளில் சின்ன ஒரு பள்ளத்தில் ஒரு திரவம் இருக்கும், நாம் எந்த பக்கம் சாய்ந்தாலும் அந்த திரவமும் அந்த பக்கம் சாயும், மூளை அதை புரிந்து கொண்டு அந்த பக்கம் சாய சொல்லும் அல்லது செய்யும் . ராட்டினத்தில் இருந்து இறங்கினதும் அந்த திரவம் இங்கும் அங்கும் அசைவதினால்தான் நாமும் அங்கும் இங்கும் சற்று ஆடி அடங்குவோம்.

உங்களுடன் வருபருக்கு வாந்தி வந்தால், முக்கியமாக இஷ்டப்பட்டுதான் உங்களுடன் வருகிறாரா என பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் பஸ் ஏறியவுடன் அவருக்கு வாந்தி வரலாம்.


வெங்காயம்
வெட்டும் பொழுது கண்ணீர் வருவதேன்?
(சர்மிளா - சென்னை)



வெங்காயத்தில் உள்ள ஒரு அமிலம் (ப்ரோப்பேன்தாயல் ஆக்ஸைடு) சுலபமாக ஆவியாகி கண்களை பாதித்து, பலன் கண்ணீர்.


பறவைகள் மட்டும் எப்படி மின்சார கம்பியில்...?
(சிவா - ஆவடி)

ஒரு கம்பியில் அமர்ந்தால் பறவைகளுக்கு மட்டும் அல்ல நமக்கும் ஒன்றும் ஆகாது. மின்சாரம் பாய வேண்டுமானால் இரண்டு கம்பிகளையும் கொஞ்சமேனும் தொடவேண்டும், தொட்டால் மற்றவர்கள் இன்சுரன்ஸ் கம்பெனிக்கு போன் போட வேண்டிவரும்.



அலர்ஜியை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
(பாஸ்கர் - சென்னை)

அலர்ஜியை பொருத்தமட்டில் அது ஓன்றும் பாக்டீரியாவை போன்று உடம்பில் உருவாகி வரும் நோய் போன்றதல்ல. பொதுவாக நம் உடம்பில் தற்காப்புக்காக இம்யுன் சிஸ்டம் (நோய் எதிர்ப்பு வகையறா) என்பது எல்லோருக்கும் உண்டு. சில நேரங்களில் சில வஸ்த்துக்களை நாம் விழுங்கும் போதே, தூசி போன்ற சமாச்சாரங்களை உடம்புக்குள் ஏதோ ஒரு வழியில் உள்ள போகும் போது இந்த இம்யுன் சிஸ்டம் குளறுபடி பண்ணி அலர்ஜி என்ட்ரி.

இந்த
வியாதிக்கு அலர்ஜி என பெயர் சூட்டியவ டாக்டர் க்ளெமன்ஸ் ப்செராய்ஹன். அலர்ஜி வருவது ஓவ்வொருவருக்கும் வேறு வேறு வகையில் வரும். ஒருத்தருக்கு முள்ளங்கி அலர்ஜி என்றால் இன்னொருவருக்கு கத்திரிக்காய்.

இது நமக்கு எந்த பொருளால் வருகிறது என்பதை தனிப்பட்ட ஒருவருக்கு ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடிப்பது என்பது சிரமமான விஷயமே. சில ஆண்டுகளுக்கு முன் இந்த அலர்ஜிக்கு காரணம் ஆராக்கிடோனிக் ஆஸிட் என்றும் கெமிக்கல் சமாச்சாரம்தான் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஓரு வேளை உங்களுக்கு கெட்ட விஷயங்களை பார்க்கும் பொழுதோ, அதைப்பற்றி பேசும் பொழுதோ அலர்ஜியாக உணர்ந்தால் டாக்டரிடம் போகாதீர்கள். உங்களுக்கு வந்த இந்த அலர்ஜி மட்டும் எல்லோருக்கும் வர இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.



பிளைட்டின் (flight) கருப்பு பெட்டி எதற்கெல்லாம் பயன்படும் ?
காமிலா - அதிரை

பிளைட் டேட்டா ரிக்கார்டர் (flight data recorder) எனப்படும் பிளாக் பாக்ஸ் உண்மையில் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள பொருள். எந்த ஒரு விமானமும் விபத்திற்குள்ளான பிறகு இந்த கருப்பு பாக்ஸை (ஆரஞ்சு பாக்ஸ்) தேடிப்பிடித்து அதில் கடைசியில் என்ன மாதிரியான வார்த்தைகள், சப்தங்கள் பதிவாயிருக்கின்றன என்பதை ஆராய்வார்கள், அதற்கு மட்டுமல்லாமல் முதலில் இயக்கி பார்க்கும் விமானங்களின் சேப்டி சம்பந்தப்பட்ட விபரங்களுக்கும் ஜெட் என்ஜீனின் செயல் திறன்களை பரிசோதிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.



எந்த
மாதிரியான விபத்தாக இருந்தாலும் இந்த பெட்டி மட்டும் பிழைத்துக் கொள்ளும். ரொம்ப அரிதாக சில தகவல்கள்களில் சில குறைகள் நேரிடலாம், அதுவும் அந்த விபத்தின் தன்மையை பொறுத்து.



ஈகோ (EGO) பிடித்த இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஜெயிக்க முடியுமா?
- கோப்பி அன்வர், பெரிய தெரு, காயல்பட்டணம்

முடியும் ! போட்டியென்று வந்தால் யாராவது ஒருவர் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் இங்கு ஈகோ பிடித்த இருவருமே ஜெயிக்க காரணம், ஒருவருக்கொருவர் தங்களது தோல்விகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஒருவேளை ஒப்புக் கொண்டால் அவர்களுக்குள் ஈகோ போய்விட்டதென்று அர்த்தம்.


கேள்வி - பதில்கள் -4

எரிமலைகளை பற்றி சொல்லுங்கள்!
பாத்திமா-காயல்பட்டணம்.

பூமியின் உட்புற பகுதியில் வெப்பத்தின் காரணமாக ஒருவகை குழம்பு (இதை ‘மேக்மா’ என்று சொல்லுவார்கள்) உருவாகும். பாறைகள் பலவும் அதிக உஷ்ணத்தால் குழம்பாய் மாறிவிடும். பின்னர் நம் பூமிகட்டுக்கள் சந்திக்கும் இடங்கள் மூலமாக வெளியேற பார்க்கும், முடியாமல் போகவே ஒரு சிறுமலை போன்று நாளடைவில் உருவாகி, எப்படா வெளியே போய் ‘மேக்மா’ குழம்பை கக்கலாம் என்று உறுமிக்கொண்ட காத்திருக்கும்.


ஏதோ ஒரு பூகம்பம் அந்த பகுதியை லேசாக ஆட்டிவிட்டு போனால்.... அவ்வளவுதான். அம்மா ஜிவ்வுனு மேக்மா எனப்படும் நெருப்பு குழம்பை ஆயிரகணக்கான அடி உசரத்திற்கு பீச்சி அடிக்கும். அந்த மேக்மா குழம்பில் அலுமினியம், இரும்பு, மக்னீஷியம், கால்சியம், பொட்டாசியம், டைடேனியம் எல்லாம் ஆக்ஸைடு வடிவத்தில் கிடைக்கும். (இதெல்லாம் கடல் மண்ணிலே கூட கிடைக்கும்).


20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிமலை சீற்றம் என சொல்லப்படும் ‘பினாடுபோ எரிமலை’ சீற்றம் மிகப்பயங்கரமாக தன்னை வெளிப்படுத்தியது. 1991ம் ஆண்டு ஜுன் 15ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த இந்த எரிமலையின் சீற்றம் சுமார் 1000 கிலோமீட்டர் சுற்றளவுக்கு தன் பாதிப்பை வெளிப்படுத்தியது. சீற்றத்திற்கு முன் சுமார் 1750 மீட்டர் உயரம் இருந்த எரிமலை, சீற்றம் முடிந்த பின்பு 1485மீட்டர் உயரம் தான் இருந்தது. சுமார் 260 மீட்டர் பாறைகள் வெடித்து சிதறி இருக்கின்றன.


இதில் உலகத்தின் பெரும் கவலையாக எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயம் “சீற்றத்தின் போது சுமார் 22லட்சம் டன் கந்தக டை ஆக்ஸைடு வெளியான விஷயம்தான். உயிர்சேதம் அவ்வளவாக கொடுக்காது. காரணம் முடிந்த ளவிற்கு அதன் சீற்றத்தை முன்னே கணித்து சுற்றி இருக்கும் மக்களை வெளியேற்றி விடுவார்கள்.


ஞாபக சக்தி அதிகமாக இருக்க ஏதேனும் வழிமுறைகளை பின்பற்றலாமா? பீர் முகமது - சித்தன் தெரு, காயல்பட்டணம்

நினைவாற்றல் என்பது ஓன்றும் பெரிய விஷயமில்லை. தேவைப்படும் பொழுது ஒரு விஷயம் நம் ஞாபக அறையிலிருந்து நமக்கு தெளிவாக வெளிப்பட்டால் அதை நல்ல ஞாபக சக்தி என்று நாமே சொல்லிக் கொள்வோம்.


ஒரு விஷயத்தில் நமக்கு இருக்கின்ற அதீத ஈடுபாடு அந்த விஷயத்தை நிச்சயம் மறக்கச் செய்யாது. சினிமா விஷயங்களில் இருக்கின்ற அந்த ஈடுபாடுதான் அந்த துறையை சார்ந்த அநேக கேள்விகளுக்கு பதில் சொல்ல வைக்கிறது.

மூளையை பொறுத்தமட்டில் அதில் காணப்படுகின்ற மிக மெல்லிய சரடுகள், மடிப்புகளில் ஞாபசக்தி அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். ஜன்ஸ்டீனின் மூளையை பல பரிசோதனைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் ஜீனியஸ் என்று எல்லோராலும் கருதப்பட்ட ஜன்ஸ்டீமீனின் மூளை ஆராய்ச்சிக்குரியது தான்.


மற்றபடி வெண்டைக்காய் தின்றால் ஞாபகசக்தி இருக்கும் என்பதும், வல்லாரை கீரை போன்ற சைவ பொருட்கள் அதிகம் தின்றால் ஞாபக சக்தி வளரும் என்பதெல்லாம் அவ்வளவாக அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை.
ஞாபகசக்தியை வளர்க்க எனக்கு தெரிந்த ஒரே வழி “செய்வதை மனதுக்கு பிடித்தமாகவும், விரும்பியும் செய்வதுதான்.”



மரபணு சோதனை மூலம் தாய்-தந்தை யார் என்பதை அவ்வளவு துல்லியமாக சொல்லிவிட முடியுமா?
சாகுல் ஹமீது - கஸ்டம்ஸ் சாலை - காயல்பட்டணம்


முடியும் ! மரபணு (DNA கட்டட அமைப்பை ஓப்பிட்டு பார்த்து சொல்வார்கள். ஓரு பிள்ளையின் தகப்பன் இவர்தான் என்பதை 99.9 ரூ சதவீதமும், தாய் இவர்தான் என்பதை 100 சதவீதமும் உறுதியாய் கண்டுபிடிக்கலாம். டெஸ்ட் செய்ய ஓருவரது எச்சில், அல்லது ரத்தம் இருந்தால் போதும்.


பாழாய் போன சினிமாவில் யாருக்கு யார், தகப்பன், அல்லது பிள்ளை என்பதை இந்த மாதிரி மரபணு சோதனை கொண்டு கண்டுபிடிக்காமல் “குடும்பபாட்டு” ஒன்று பாடுவார்கள் பாருங்கள் பயங்கர காமெடி! “இவன் எனக்கு பிள்ளையே இல்லை” என்று இனி எந்த அப்பாக்களாலும் அவ்வளவு ஈஸியாக சொல்ல முடியாது-சினிமாவில் கூட இந்த டயலாக் எடுபடாது!

குறட்டையை நிறுத்த மருந்து ஏதும் உண்டா? ஷர்மிளா, வீரகேரளம் - கோவை.

சற்று உடல் பெருத்தவர்களுக்கும், மூக்கில் சிறு சுடைப்பு போன்ற பிரச்சனை உடையவர்களும் வாயினால் சுவாசிக்கும் பொழுது சற்று சத்தம் வரும். உலகமே தூங்கிய வேலையில் அமைதியான நிசப்தத்தில் குறட்டை சத்தம் நிச்சயம் எரிச்சலூட்டுபவைதான்.


இப்பொழுது அதற்கு ஸ்பிரே மாடலில் ஒரு எண்ணெய் தயாரித்திருக்கிறார்கள். பாதாம் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், நீலகிரி தைலம், இவற்றை யெல்லாம் கலக்கி வைட்டமின் B6,C,E ((பிரிடாக்ஸைன்) pyridoxis சேர்த்து தயாரித்திருக்கிறார்கள். தூங்க செல்லும்முன் குறட்டை விடும் கணவான்களின் உள்நோக்கிலும், தொண்டையிலும் ஸ்ப்ரே அடித்துவிட்டால், தொண்டையில் உள்ள தலைநார்களை மரத்து போக செய்து, குறட்டையை தடுக்கும்.
முன்னேறிய நாடுகளில் குறட்டை விட்டதெற்கெல்லாம் விவாகரத்து வாங்குவது ரொம்ப சாதாரணம்.


அப்ப நம் நாட்டில்?..... நம்ம வீட்டு பெண்களுக்கு பொறுமை அதிகம். பக்கத்து ரூமில் போய் தூங்கிகொள்வார்கள்.


பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவு தூரம்?
திலகா - சென்னை -1.
வானம் என்பது ஒர முடிவு அல்ல அது முடிவுறா வகையறா (infinte) நீங்கள் அண்ணாந்து பார்க்கும் வான வெளியில் தெரியும் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களுக்கு அப்பாலும் பல விஷயங்களை இருக்கின்றன நாமாக, நமக்கு மேலுள்ளதை வானம் என்று ஒரு பெயரிட்டிருக்கிறோம். அது ஒரு மனித அறிவுக்குள் அடங்கா பிரம்மாண்ட சமாச்சாரம் .


பக்கத்தில்??!! நம்மால் ஓரளவுக்கு துல்லியமாக இப்போதைக்கு கண்டுபிடித்திருக்கும் "ப்ரோசிமா செண்டோரி" என்கிற விண்மீன் இருக்கும் தூரம் நாலரை ஒளியாண்டு தூரம் ( ஒளி ஒரு செகண்டுக்கு மூணு லட்சம் கிலோ மீட்டர் வேகம் செல்லும்., இப்ப கணக்கு போட்டு பார்த்து வாய பிளங்க)

கேள்வி பதில்கள் - 3

நன்றாக சாப்பிட்டதும் ஒரு மாதிரி மந்த நிலை (தூக்கம்) வருவதேன்?
அமீர் - காயல்பட்டணம்

சாதாரணமாக தெரியும் நம் மூளை நாம் சுவாசிக்கும் காற்றில் 50% சதவீதக்கும் மேல் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும், இரத்த ஓட்டத்தை பொறுத்தவரையிலும் கூட அப்படிதான். நீங்கள் நன்றாக சாப்பிட்டால் உடனே உங்கள் வயிறு உணவை செரிமானம் செய்ய இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜனையும் பங்கு போட வரும் பொழுது, மூளை தனக்கு உரிய இரத்தம் வராமல் கொஞ்சம் ஸ்தம்பிக்க, மந்த நிலை ஆரம்பம்.

நம் உடம்பிலேயே மிகவும் பசி கொண்ட உறுப்பு மூளைதான். அதற்கு ஆக்ஸிஜனும், இரத்த ஓட்டமும் அதிகமாக வேணும்.



இடி விழுந்து சாவு - எப்படி?
(காயத்திரி, பேராவூரணி )



இடி என்பது ஓரு பெரிய கல் என்பது போன்றோ, அல்லது கனத்த இரும்பு துண்டு என்பது போலவோ, உள்ள விஷயம் அல்ல. மேகங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான கிலோ வோல்ட் மின்சக்தி பூமியில் சில உயரமான பொருட்களுடம் ஸ்பார்க் அடிக்கும் அந்த மின்சாரம்தான் இடி, நீங்கள் காதில் இடிசத்தம் கேட்டது என்று சொல்வது, மின்னல் உருவாகும் சமயத்தில் வருகின்ற சத்தம் தான் அது. மின்சாரம் ஒன்று கூடி ஒரு இடத்தில் பயங்கரமான வோல்டேஜ் சக்தியுடன் தாக்குவதுதான் நம்மை காலி செய்யும் இடி பச்சைமரம் உட்பட எதுவும் இதன் முன் கருகிவிடும்.

உங்களுக்கு
தெரிந்த\பத்திரிகையில் படித்த ஒருவர் இவ்வகையில் இடிதாக்கி இற�pan> ருந்தால், அதை அவர் உணரும் முன்னே இறந்திருப்பார். அவ்வளவு சக்தி.



மாரடைப்பு பற்றி. !?
( மாலதி, சென்னை)

இந்தியாவில் பரவி வரும் நோய்களில் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோயை போல வெளிநாடுகளிலும் (ஏன். . .இந்தியாவிலும் கூட) அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் பிரச்சனை ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்புதான், பெரும்பாலும் ஆண்களுக்கு, அதிலும் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்த மாரடைப்புக்கான சாத்திய கூறுகள் அதிகம். இதயம் எல்லா பகுதிகளுக்கும் ரத்தம் சப்ளை செய்யும் குழாய்களை கரானரி ஆர்ட்டரிஸ் என்பார்கள், மொத்தம் இரண்டு குழாய்கள் உண்டு. இவைகளை அடைப்பு ஏற்படும் போதுதான் சிக்கல்.


மாரடைப்பு ஏற்பட காரணம் பல. அவைகளில் சில, அதிகம் அலட்டிக் கொள்ளும் போது, நிறைய சாப்பிட்டபின், ரொம்ப குளிர் அனுபவிக்கும் போது,மேற்சொன்னவைகளும் கூடி நின்றால் 90 சதவீதம் மாரடைப்புக்கு வாய்ப்பு. மாரடைப்பை உணரும் வகைகளில் சிலர் பொதுவாக மார்பின் நடுவில் வலி வரும், அதிகமாக வேர்க்கும், மூச்சு திணரும் ரத்தம் இல்லாமல் பல்ஸ் சடாரென்று குறைந்து நினைவிழக்கும், இப்படி சிலவற்றில் ஒன்றை உணர்ந்தால் கூட, அடுத்த ஓரு மணி நேரத்திற்குள் ஐ.சி.யு.வில் (இன்டன்சிவ் கேர் யூனிட் சேர்ந்தால்) பிழைத்துவிடலாம்.



ஆண்களுக்கு மட்டும் வழுக்கை ஏன்?
(சாதிக் பாட்சா - காயல்பட்டணம்)

பயமோ அதிக குளிரோ உணரும் பொழுது நம்முடைய சருமத்திற்கு கீழிருக்கும் அர்ரேக்டேஸ் பைலோரம் என்கிற தசை இருகி அதனால் சருமம் இழுக்கப்பட்டு மயிர்கால்கள் நிற்கின்றன. நம் தலையில் சராசரியாக 2 லட்சம் முடிகள் வரை இருக்கின்றன. அவைகள் மாதத்திற்கு சராசரியாக அரை அங்குலம் வீதம் வளர்கின்றன. பெண்களுக்கு வழுக்கை வருவது மிக அரிது. மெனோபாஸுக்கு பிறகு அவர்களும் கொஞ்சம் முடி துறப்பார்கள். கர்ப்பத்தின்போது ஹார்மோன் அளவு அதிகமாவதால் பெண்களுக்கு கூந்தல் நிறைய வளரும். பிள்ளை பெற்றபின் ஆறுமாதம் முடி உதிருதல் அதிகமாக இருக்கும். பின்பு சரியாகிவிடும்.

ஆனால் ஆண்களுக்கு வம்சாவளி சமாச்சாரம் எல்லாமல் பார்க்கவேண்டும். கற்கால மனிதனிலிருந்து இன்று வரை உள்ள காலகட்டத்தில் முடி இழப்பது (வழுக்கை) கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. அதில் நம் பெற்றோர் மாமா, வம்சம் போன்ற சமாச்சாரங்களையும் அலசி பார்த்தால் நமக்கு வழுக்கை வருவதை சற்று எதிர்பார்க்கலாம். மேலும் ஆண்ட்ரேஜென் என்கின்ற வகை சுரப்பிகள் செக்ஸ் சம்பந்தமான ஆண்கள் வகை சுரப்பிகள் அதிகமானால் நிச்சயம் முடி உதிர்வது அதிகமாகும்.



மலைபிரதேசங்களில் குளிர்ச்சியான க்ளைமேட் எப்படி வருகின்றது.? (ஷைலஜா , சென்னை)


சூரிய ஒளியை கடல் மட்டத்திற்கு சமமாக இருக்கும் அடர்த்தியான காற்று கிரகித்து நமக்கு தருவதால் கொஞ்சம் வெப்பம் அதிகம். மலைமேல் இருக்கின்ற அடர்த்திக் குறைந்த காற்றுமண்டலம் கிரகிக்க முடியாமல் சூரிய ஒளியின் வெப்பம் குறைந்து குளிர் தெரிகிறது.

ஓரு சின்ன பரிசோதனை இது. நீங்கள் ஊட்டி போன்ற மலை பிரதேசங்களுக்கு செல்லும் போது செய்து பாருங்கள். ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலை நன்றாக மூடி வைத்துக்கொள்ளுங்கள். மலையின் உச்சியை தொட்டபின் பாட்டிலின் அடைப்பட்டிருந்த காற்று மிகுந்த சத்தத்துடன் வெளியே வரும். பின்பு அதே பாட்டிலில் நன்றாக மூடி மலையை விட்டு கீழே இறங்கியவுடன் பாட்டிலை நன்றாக பாருங்கள் அது கண்டிப்பாக சிறுதளவாவது யாரோ கையால் பிடித்து நைத்தது போல் இருக்கும். காரணம் சமமட்டத்தில் இருக்கும் காற்று அடர்த்தியாக இருப்பதால் பாட்டில் உள்ளே இருக்கும் குறைந்த காற்றழுத்தத்தை சமன்படுத்த இந்த காற்று முயற்ச்சித்ததால் பாட்டில் நைத்து போயிருக்கும்.

பெங்களூர் குளிராக இருப்பதற்கு காரணம் அது கடல்மட்டத்திலிருந்த சுமார் 850 மீட்டருக்கு மேலே இருப்பதால்தான். கோயம்புத்தூர் சென்னையை போல் வெப்பம் அதிகமாக இல்லாமல் இருப்பதற்கும் அது 450 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேலே அமைந்திருப்பதும்தான் காரணம்.


அறிவியல் சம்பந்தபட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்ல என்னால் முடியாது. என்னுடைய ஆரம்ப கல்வியினாலும், எனது புரிந்து கொள்ளும் தகுதியும் தான் எந்த கேள்விக்கு பதில் அளிப்பது என்பதை முடிவு செய்கிறது. இயந்திரவியல், இயற்பியல் என்று பல பிரிவுகளிலும் உள்ள விஞ்ஞான விளக்கங்கள் தெரிந்து கொள்ள ரொம்பவும் ஆசைதான். என்னுடைய அடிப்படை திறனில் அது இயலாத காரியமாய் இருக்கிறது.

முடிந்தவரையில் ஒரு கேள்விக்கு பல நூற்களிலிருந்தும், ( சுஜாதாவின் பங்கும் ) இணையத்தளத்திலிருந்தும் படித்ததை தொகுத்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறேன். முயற்சியின் மதிப்பெண்களை நீங்கள்தான் சொல்ல வேண்டும். வெள்ளிநிலா’ மற்றும் ‘மக்கள் ஒளி’ என்னும் மாத இதழ்களில் அறிவியல் சம்மந்தப்பட்ட கேள்வி பதில்களுக்கு   வருகிறேன். அவைகளில் சில அவ்வப்பொழுது உங்களுக்காக........

கேள்வி பதில்கள் - 2


எரிகற்கள் என்பது என்ன? எப்படி உருவாகுது? அப்துல் - சென்னை.

எரிகற்கள் (meteoroids) என்பவை வால் நட்சத்திரங்களின் மிச்ச பகுதிதான். அதில் இருவகை உண்டு. உலோக எரிகற்கள், நிக்கல் இரும்பு சத்துடன் உள்ளது இன்னொன்று, வானத்திலிருந்து விடுபட்டு ஏதோ ஒரு திசையில் பயணிக்கும் பொழுது சில நேரம் பூமியை நோக்கியும் வருவதுண்டு, அப்படி வந்தால், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் போது, காற்றுடன் உராய்ந்து எரிந்துவிடும். ஒருவேளை பெரிய கற்களாக இருந்தால் எரிந்தது போக, மீதி பூமியில் விழும். சுமார் 100 கிலோ மீட்டர் வானவெளியில் எரிந்து கொண்டே வரும் சின்ன சின்ன கற்களை நீங்கள் சில நேரம் இரவு நேர வானத்தில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.


பல கிரகங்களுக்கு நடுவே சிறியது முதல் பெரியது வரையிலான பல எரிகற்கள் அவ்வப்பொழுது பூமியில் அம்மாதிரி வந்து எரிந்து போவதுண்டு. ஒரு வேளை பெரிய கல் வந்திருந்தால்....? வந்திருக்கிறது 1908 ஜுன் 30ல் ரஷ்யாவின் மத்திய சைபீரிய பகுதியில் ஒரு ராட்சத தீக்கோலம் போல கீழே விழுந்து ஒரு பெரிய கால்பந்து மைதானம் அளவிற்கு பள்ளத்தையும் ஏற்படுத்தியது எரிகற்கள். பின்னர் ஆராய்ச்சி செய்து பார்த்து அந்த பாதிப்பு வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதி தாக்கியதால் உண்டானது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

‘துங்கங்கா’ நிகழ்ச்சி என வரலாற்றில் பதிந்திருக்கிற நிகழ்ச்சி இது.



பூமியிலிருந்து எவ்வளவு தூரம் காற்று மண்டலம் உள்ளது? எத்தனை வாயுக்கள் உள்ளது?
சிராஜுதீன் - பாண்டிசேரி

நம் பூமியை சுற்றி வாயு மண்டலம் பல பிரிவுகளின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. நைட்ரஜன் 75ர% ஆக்ஸிஜன் 20ர% மற்றவைகள் மீதி 2 % என்ற விகிதாசாரத்தில் வாயுமண்டலம் அமைந்திருக்கிறது. இந்த கலவைகளின் மொத்த பெயர்தான் காற்று. இந்த காற்று மண்டலம் தான், நேரடி சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் அதிக குளிர்ச்சி போன்ற விஷயங்களை சிறிது மட்டுப்படுத்துகிறது.

இந்த உயரத்திலிருந்து இந்த உயரம் வரைக்கும் என்று எதுவும் தனியாக பிரிக்க முடியவில்லை. போக போக உயரம் கூட கூட வேறொரு வாயு மண்டலத்தில் புகுந்துவிடலாம். தோராயமாக கடல் மட்டத்திலிருந்து 20கிலோ மீட்டர் தூரத்தை கணக்கிட்டு அதற்கு ‘கர்மன் லைன்’ karman line என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்கு அப்புறம் உள்ளவை outer space எனப்படும் இன்னொரு வாயுமண்டலமாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.

EXOSPHERE - சுமார் 500KM மேலே உள்ளவைகளை குறிப்பிடுவார்கள். THERMOSPHERE சுமார் 80 முதல் 85 KM வரை MESOSPHERE சுமார் பூமியிலிருந்து 50 KM மேலே, எரிகற்கள் தீப்பிடித்து சாம்பலாகும் பகுதி இது.

STRATOSPHERE இது இரண்டாவது பெரிய வாயு மண்டலப்பகுதி. இது சுமார் பூமியிலிருந்து 50 KM வரை இதுதான் பூமியின் அடிப்பகுதி. 75 % வாயு மண்டலத்தின் மொத்த மூலக்கூறுகள் இதற்குள்தான். சுமார் 11 KM உயரம் வரை பரவிக் கிடக்கும்.


கிரிக்கெட் வீரர்கள் அளவிற்கு மற்ற விளையாட்டு வீரர்கள் யாரும் அதிகம் சம்பாதிக்கிறார்களா? - யேசுராஜ், அதிரை

நம்நாட்டை பொறுத்தமட்டில் கிரிக்கெட் வீரர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மை. மக்களின் வரவேற்பு மற்றும் அதனால் புழங்கும் கோடிகணக்கான பணம் போன்றவைகளால் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் உலகளவில் அதிகம் சம்பாதித்ததாக அறியப்படும் ‘டைகர் வூட்ஸ் ’ கோல்ப் விளையாட்டில் உலக சாம்பியனாக இருந்தவர், இப்பொழுதும் அடிக்கடி முன்னிலையில் இருக்கிறார். கார் பந்தயவீரராக இருந்த “மைக்கேல் ஷீமேக்கர்” உலகில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். நம் நாட்டில்..., கிரிக்கெட் வீரர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

அதிகம் பேருக்கு தெரியாத விளையாட்டாகிய செஸ் போட்டியில் தமிழ்நாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்த் வருடத்திற்கு பல கோடிகளை சம்பாதிக்கும் வீரராவார். 2013 நடந்து முடிந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதற்கு ஆனந்த் வென்ற பணம் ரொம்ப கொஞ்சம்தான்... 6.25 கோடி!



ஒரு ஊரில் மழையின் அளவினை எப்படி கணக்கிடுவார்கள்?
அபுபக்கர் - கல்ப் டெக்ஸ் - மெயின்ரோடு, காயல்பட்டணம்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் விழுகின்றது என்பதை அதன் உயரத்தில் உள்ள அளவை வைத்து குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக காயல்பட்டணத்தில் 2 செ.மீ. மழை பெய்தது என்று அறிவித்தால், அதன் அர்த்தம் “காயல்பட்டணத்தின் மொத்த பரப்பளவு முழுவதற்கும் 2 செ.மீ. உயரம் தங்க கூடிய அளவிற்கு மழை பெய்தது என்று அர்த்தம். அந்த 2 செ.மீ. தண்ணீரை மண் பகுதி உடனே உறிஞ்சுக் கொள்ளும். ரோடாக இருந்தால் மெதுவாக உறிஞ்சிக் கொள்ளும்.

கேள்வி -பதில்கள் -1

சுஜாதாவின் பதில்கள் என்று எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அத்தனையும்., வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சுகமான அனுபவமே தரும்., அறிவியல் பதில்கள் சற்று கஷ்டம் என்று அதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களே தயங்கியபோது , இவரின் " ஏன்? எதற்கு? எப்படி" புத்தகத்தின் வெற்றியை பற்றி சொல்லவேண்டியதில்லை.,

இரண்டு வருசமா வாசகர்களின் கேள்விக்கு ( மெய்யாலுமே சார்....) பதில் சொல்லி தொலைச்சிட்டேன்., அந்த பதில்களில் ஏதோ ஒன்னு ரெண்டு நல்லதா தெரிஞ்சுது.. அததான்...... இப்ப..... பதிவா..... ஹி..ஹி...ஹி...)


யானையின் தந்தத்தை பற்றி கொஞ்சம்.. ப்ளீஸ் ....?
-முபீனா, சொளுக்கார் தெரு, காயல்பட்டணம்

யானையின் மேல்தாடையில் உள்ள வெட்டுப்பல்தான் தந்தமா மாறி, நவநாகரீக மனிதர்களின் வேட்டைக்கு காரணமாகிறது. இங்கிலிஷ்ல இதுக்கு பேரு டாஸ்க் (task) .ஆசிய யானைகள், ஆப்ரிக்க யானைகன்னு இரண்டு முக்கிய வகை இருந்தாலும், ஆப்ரிக்க யானைகளில் ஆண்/பெண் இரண்டுக்கும் தந்தங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும்.


வருடத்திற்கு 15லிருந்து 18 சென்டிமீட்டர் வரை வளரும் தந்தம் யானையின் வாழ்நாள் முழுவதும் வளரும் தன்மை கொண்டது. தந்தக்குள் பாதி இடம் மூங்கில் கம்புக்குள் இருப்பது போல் வெற்றிடம் இருக்கும். ஏறக்குறைய 95% “டென்டைன்” என்ற வஸ்துவால் ஆனது தந்தம். தந்தத்தை மனிதர்கள் அலங்கார பொருட்களுக்காகதான் அதிகம் விரும்புகிறார்கள். பியானோ கருவியின் கட்டைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.



கொசுவை ஒழிக்கவே முடியாதா? காலம் பூராவும் கொசுவத்தி சுருள்தானா? திலகா - சென்னை

அமெரிக்காவாகட்டும், ஆப்பிரிக்காவின் அல்ஜிரியா நாடாகட்டும் எல்லா நாட்டுக்கும் இருக்கும் தலைவலி கொசு. பூகம்பம், மற்றும் இயற்கை பேரழிவுகளால்தான் மனித இனத்தில் அதிகபட்சம் மரணம் நடைபெறுகிறது என்பது உண்மையல்ல. உலகத்தில் வருடத்திற்கு 20 லட்சம் பேராவது இந்த கொசுவால் மரணமடைகிறார்கள்.

கொசு பலவகைகள் இருந்தாலும் “ஏடிஸ் °”, “அனஃபேலிஸ் °”, ‘கியூலக்ஸ்°’ ஆகிய வகை கொசுக்கள்தான் பயங்கர வகை கொசுக்கள்.

அமெரிக்காவில் கொசுவை விரட்ட இயற்கை முறைகள் தான். துளசி, எலுமிச்சைப்புல், எலுமிச்சை பசைச்செடி போன்றவற்றை வளர்ப்பது, ‘சிட்ரோனெல்லா’ மற்றும் ஜெரானிடம் எண்ணெய் கொழுப்பில் செய்யப்பட்ட மெழுகு வார்த்திகளை எரியவிடுவது, மின்னியல் பொறிகள் இப்படி பல வகை முயற்சிகளில் தப்பித்து செவ்வனே வாழ்கிறார்கள். இந்தியாவில் விற்கப்படும் கொசுவிரட்டி வில்லைகள், திரவங்கள் பெரும்பாலும் ‘பைரித்ராய்டு’ ரசாயனங்களால் தயாரானவைதான். தொடர்ச்சியாக பயன்படுத்தினால் இருமல், மூச்சிரைப்பு, மூச்சு வாங்குதல், தோலில் அரிப்பு, கொப்புளம், தைராய்டு சுரப்பி பாதிப்பு... இப்படி பல பிரச்சனைகள்.

உலகெங்கும் கொசு உள்ள நாடுகளில் தப்பித்து வாழ்வது எப்படி என்று தான் பார்த்து வாழ்கின்றார்கள். ஒழிக்க முடியாதா? என ஏங்குபவர்களுக்கு “பேரி காமனரி”ன் இயற்கை விதிகளை சொல்லாம். சொன்னால் இதற்கு பேசாமல் கொசுக்கடியே பரவாயில்லை என்று முறைப்பீர்கள்.


தூக்கம் என்பது ஏன்?
பாரூக், மசூதி தெரு, சாத்தான் குளம்.




உடல் உறுப்புகள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள தூக்கம் தான் முக்கியம் நமது உடம்பில் உள்ள பயாலாஜிகல் சமாச்சாரங்கள், தூக்கத்தை சரியான முறையில் பின்பற்றுபவர்களின் உடல், மற்றும் பாதங்களை சுறுசுறுப்பாகவும் நல்லநிலையிலும் வைத்திருக்கின்றன. இதயதுடிப்பு குறைந்து, மூச்சு சீராகி, அப்படியே... ஒரு சின்ன மரணம் நிகழ்ந்து காலையில் எழும்பி, விட்டேனா பார் .! என்று மற்றவர்களுடன் போட்டி போட ஆரம்பித்துவிடுகிறோம்.

தூக்கமே இல்லாமல் சாதாரண மனிதர்களால் இரண்டு நாட்களுக்குமேல் தாக்குபிடிக்க முடியாது. உடலின் மற்ற பாகங்கள் எல்லாம் ஓய்வெடுத்த பின்பு தான் மூளை சற்று ஒய்வெடுக்க ஆரம்பிக்கும். தூக்கத்தில் ரெம் (REM) வகை ஆழ்ந்த தூக்கத்தில்தான் மூளை ஒய்வெடுக்க ஆரம்பிக்கும். சரியான அளவு தூக்கத்தை உங்கள் உடம்பே தேர்ந்தெடுக்கும். மனசுதான் அதிக நேரம் தூங்க ஏங்கும்.

சரியான தூக்க கால நேரத்தை (SLEEPING HOURS) தேர்ந்தெடுப்பது ரொம்ப ஈஸி. சுமார் 7 மணி நேரம் நன்கு தூங்கி எழுந்து பாருங்கள். அந்த நாள் உங்களால் உண்மையாக சுறுசுறுப்பாக இருக்கமுடிந்தால், உங்களுக்கு7 மணி நேரம் போதும்.



ESP POWER என்றால் என்ன? அது உண்மைதானா?
பாத்திமா சிரீன், அம்பல மரைக்கார் தெரு, காயல்.

Extrasensory Perception (ESP) (ESP) எனப்படும் இந்த வகையறா விஷயங்கள் கொஞ்சம் ஆளை அசத்தும் விஷயம். நடக்க போகும் விஷயங்கள் இந்த ESP சக்தி உள்ளவர்களுக்கு தெரியும் என்பார்கள். பல கதைகளும், சில நம்பதகுந்த கதைகளும் கூட உண்டு. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபடாத இந்த சக்தி இன்னும் சில நாடுகளில், சில மாதிரிகளிடையே மிகவும் நம்பபடுகிறது. ஜோதிடர்கள் கூறும் பத்து விஷயங்களில் இரண்டாவது நடக்கும். ஏன்? நீங்கள் சொன்னால் கூட ஒரு விஷயம் நடக்கும். காரணம் நம் பாசையில் குருட்டாம்போக்கு.

அறிவியலை பொறுத்தமட்டில் மூளையில் ஏற்படும் நினைவலைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுசிறு டிராபிக் ஜாம்தான் ESP. நம் எல்லோர்க்கும் இந்த சக்தி அபூர்வமாக வந்து, அடுத்து நடக்க போகும் சில விஷயங்கள் முன்னயே தெரிய வரும். அதற்கு காரணம் மேலே குறிப்பிட்டதுதான்.

சில நேரங்களில் நமது நண்பர்கள் கூட திடீரென்று "இப்ப பாரேன் 'ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு' பாட்டு வரும் என்பார்கள் , அந்த பாட்டு கூட நீங்கள் போகும் வழியில் அடுத்து கேட்கக்கூடும், அதற்க்கு காரணம் அவர்க்கு காது கொஞ்சம் ஷார்ப்பா கேட்குதுன்னு அர்த்தம்., ஆனா ஒரு நாள் கூட நீங்கள் அதிகம் கேட்டிராத பிரபலமில்லாத பாட்டு ஒன்னை அப்படி வரும்ன்னு சொல்லமாட்டாரு...



சூரியன் மறையும் நேரத்தில் அது மஞ்சள் நிறமாக தெரிய காரணம்?
முகமது மபாஸ் , கோமான் நடுத்தெரு, காயல்பட்டணம்


முதலில் கலர் என்பது ஒரு பொருளின் மீது வெளிச்சம் பட்டு அது நம் கண்களுக்கு வந்து விழும் அந்த நிறம்தான் நாம் பார்க்கும் அந்த பொருளின் நிறம். இருட்டான அறையில் அந்த பொருளின் மீது வெளிச்சம் படாததால் தான் எந்த பொருளும் தெரிவதில்லை.

சூரியனின் நிறம் வெவ்வேறாக தெரிவதற்கு காற்றில் உள்ள மூலக்கூறுகள் (MOLECULES) சம்பந்தப்பட்ட விஷயம். காற்றில் எந்த அளவிற்கு மூலக்கூறுகளின் தன்மை இருக்கிறதோ அந்த அளவிற்கு சூரியனின் நிறங்களின் மாற்றங்கள் தெரியும். அப்படி தெரிகின்ற காரணம் சூரியன் அல்ல, ஏற்கனவே சொன்னது போல் காற்றில் மிதக்கின்ற மூலக்கூறுகள்தான் காரணம்,