இது எனக்கு பிடிச்ச ஒரு பொழுதுபோக்கு விளையாட்டான " யார் மனசுல யார்?" என்ற விளையாட்டை பற்றியது! அது எது குறித்தது என்று இன்னும் விளக்கம் வேண்டுவோர் இந்த இடுகையை படித்துவிட்டு வரவும்!
பொதுவாக எனக்கு வாசிக்கும் பழக்கம் சராசரி மனிதர்களை விட அதிகம் என்றாலும், மிக பெரிய அளவில் புத்தகப்புழு என்று என்னை (நானே) சொல்லிக்கொள்ள முடியாது., அதே நேரம் பொது அறிவு சம்பந்தமான புத்தகங்கள் , வரலாறுகள், புள்ளிவிபரங்கள் , அறிவியல் விஞ்ஞானிகள் , புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள் என்ற வரையறையில் வரும் புத்தகங்கள் மீது கடந்த பத்துவருடங்களாக அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டது. அதற்கு முன் படித்ததில் பாதி., புதினங்கள் வகையை சேர்ந்ததாக இருந்தது. ஓரளவுக்கு அதில் படித்த விசயங்கள் ஞாபகம் இருந்ததும், 2006 ம் வருடம் விஜய் டிவியில் "யார் மனசுல யார் ?" என்ற நிகழ்ச்சியை பார்த்த போதும்தான், "அட இப்படி ஒரு விஷயம் இருக்கா"! என்று தெரிய வந்தது.
அதன் பின் அப்படியே நண்பர்களிடம் அடிக்கடி JUST FOR FUN என்ற வகையில் விளையாடும் போதுதான் பரவாயில்லையே .... நமக்கும் கொஞ்சம் உலகம் தெரிந்திருக்கே என்று நமக்கு நாமே திட்டத்தில் பாராட்டிவிட்டு, அதனை கொஞ்சம் முறைபடுத்தினேன். அதன் பின் பிரயாணங்களில், நண்பர்களிடத்தில், இணையத்தில் என்று கடந்த நான்கு வருடமாக விளையாடி வருகிறேன். பெரிய திட்டமிடாமல் / தயாராகாமல் அவர்கள் அப்படி என்னிடம் விளையாடியதில் 99 % வெற்றி எனக்குதான் கிடைத்தது. அதே நேரம் இணையத்தில் வரும் நண்பர்கள், விக்கிபீடியா போன்ற தளங்களில் தங்களை நன்கு தயார் செய்து வரும் போதுதான் தோற்கும் விகிதாசாரம் அதிகரித்தது, அதே நேரம் நானும் கொஞ்சம் அதிகம் தயார் செய்ததால் அதன் வெற்றி சதவிகிதம் 80% மேலே வந்தது.
தற்போது அந்த விளையாட்டை உங்களில் ஆர்வம் உள்ளவர்களுடன் விளையாட விரும்புகிறேன். நீங்கள் மூன்று வெவ்வேறு துறையை, நாடுகளை சேர்ந்த நபர்களை நினைத்து வைத்துகொண்டு தொடர்ச்சியாக மூன்று முறையும் வெற்றி பெற்றால் உங்களுக்கு ஒரு புத்தகம் பரிசு!
இந்த விளையாட்டுக்கு நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் பிரபலம் என்பதாக மட்டுமல்ல, தனித்தன்மை வாய்ந்தவராகவும் இருக்கணும். மொத்தத்தில் நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் சில ட்ரிக்கியான வரையறைக்குள் வரவேண்டும்., சில உதாரணங்கள்.....அதனை வைத்து எந்த நபர்களை தேர்ந்தெடுத்து விளையாடலாம் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!
இந்திய பிரதமர்கள், ஜனாதிபதிகள் , எல்லோரும் இந்த வரையறைக்குள் வருவார்கள், அதற்காக பாகிஸ்தானின் எல்லா பிரதமர்களும் வரமாட்டார்கள்., தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் எல்லோரும் இதில் வருவார்கள், அதற்காக கேரளா, ஆந்திரா , ஒரிசா etc எல்லா முதலமைச்சர்களும் இதில் அடங்குவார்கள் என்று கிடையாது! தனித்தன்மை பெற்றவர்கள் அவர்கள் எந்த மாநிலமாக ,நாடாக இருந்தாலும் அடங்குவர்!
கிரிக்கெட் விளையாடும் எல்லா விளையாட்டு வீரர்களும் இந்த விளையாட்டில் தகுதி உள்ளவர்கள் என்று சொல்லமுடியாது, குறைந்த பட்சம் ஏதேனும் சாதனை , அல்லது மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு ஏதேனும் ஒரு பாதிப்பை விளையாட்டில் ஏற்படுத்தி இருந்தால் ஓகே ( உதாரணம் ரிஷிகேஷ் கனிட்கர் )
ஒலிம்பிக்கில் ( நோபல் அவார்டில்) ஆயிரம் பேர் மெடல் வாங்கி இருப்பார்கள், அவர்கள் எல்லோரும் இதில் வரமாட்டார்கள், ஆனால் அதே நேரம் முதல் மெடல் வாங்கியவர் அந்த பெருமைக்காக இதில் வரலாம்! அல்லது அவர்களது தனித்திறமை ஏதேனும் ஒன்றுக்காக தகுதி வாய்ந்தவராவார் இந்த விளையாட்டில்!
ஒரு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர்கள் என்ற வருசையில் அநேகமாக கெட்ட பெயரெடுத்தவர்கள் தான் அதிகம் புகழ் பெற்றி இருக்கிறார்கள்.( கொலைகாரர்கள்..), அந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு மக்களிடம் எடுபட்டது என்ற அளவில்தான் அதில் ஈடுபட்டவர்கள் இந்த விளையாட்டுக்கு தகுதி வாய்ந்தவராவார் !
இதுவரை விளையாடி கண்டுபிடித்த / பிடிக்காத புகழ் பெற்ற நபர்களை ஆங்கில அகர வருசையில் பார்க்க இங்கே போகவும் .
யார் யார் எந்த துறையில் அடங்குவர் என்ற விபரங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள விளக்கங்கள் பார்க்க இங்கே போகவும்!
எத்தனையோ வெட்டி / விவாத பேச்சுகளை போல்தான் இதுவும்?! என்றாலும் மற்றவர்களை பாதிக்காத இந்த விளையாட்டை வாங்களேன் விளையாடிபார்க்கலாம்!